பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புனையும் 'ஆதரித்து அமுதிற் கோல்தோய்த் தவயவம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கு மல்லால் மதனற்கும் எழுத வொண்ணாச்சீதை' மன்மதனாய் இருந்தால் என்ன? அவனாலும் எழுதுவதற்கு முடியாத கற்புடைய மங்கை சீதை. சித்ரமாதர் சித்ர மாதர் என்கிறார் அருணகிரியார். அலங்காரமான பெண்கள் என்று பொருள். தன் நாயகனுக்கு மாத்திரம் இன்பம் அளிக்க அலங்காரம் பண்ணிக் கொள்ளும் பெண்ணின் அழகு பிறர் கண்களில் படாது. பிறர் கண்களில் படவேண்டும் என்றே தம்மை அலங்காரம் பண்ணிக் கொண்டு, ஆடவர் உள்ளங்களை மயக்கிக் கவர்ந்து வந்த சித்திர மாதர்கள் தனியாகவே ஒரு பகுதி இருந்தனர். உலக முழுவதும் இருந்தார்கள். வெங்காம சமுத்திரம் அத்தகைய சித்திர மாதர் மேனி முழுவதும் படர்ந்திருக்கிறது என்கிறார் அருணகிரியார். அவர் கற்புடைய பெண்களைக் குறிக்கவில்லை. பிறர் கண்ணில் பட்டும் மயல் செய்யாத கற்புடைய மங்கையர்களுடைய அழகு அவர் களுடைய கணவர்களுக்கு மட்டுமே குளிர்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கும். சமுத்திரம் பரவிக் கிடக்கின்றது என்றாலும் அதில் ஒரு துளியாவது மனிதனுடைய தாகத்தை அடக்குமா? கடல் நீரைப் பருகப் பருகத் தாகந்தான் அதிகமாகும். அதைப்போல வெங் காமத்தை நுகர நுகர மேலும் மேலும் தாகம் உண்டாகிறது; காமம் மேலும் வளர்கிறது. அந்தக் கடல் புறப் பார்வையில் படும் படியாகச் சித்திர மாதர்களுடைய உறுப்புக்களில் கொந்தளித்துக் கொண் டிருக்கிறது. தன் புறக் கண்களால் இந்த அழகைப் பார்த்து மனத்தை இழப்பவன், அக்கடலுள் மூழ்கித் துன்புறுகிறான். வாழ்நாளை வீணாக்கிக்கொண்டு ஆழ்ந்துபோகிறான். அந்தச் சமுத்திரத்தை அருணகிரியார் கடந்தாராம். 313