பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் செயலன்று. பெண்களைக் காணாமல் இருக்க முடியாது. அவர் களைப் பார்க்கும்போது காம உணர்ச்சியின்றிப் பார்க்கலாம். அதற்கு ஒரு வழி உண்டு. ஆண்களுடைய பெயர்களுக்குப் பிறகு செட்டியார், ரெட்டி யார், முதலியார், ஐயர் என்ற பட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் பெயர்களுக்குப் பின் எந்தச் சாதிக்காரர்களாக இருந் தாலும் அம்மாள் என்ற பட்டந்தான். லட்சுமி அம்மாள், சரசுவதி அம்மாள், பாகீரதி அம்மாள் என்று எந்தப் பெண் மணியாக இருந்தாலும் அம்மாள் என்று அழைப்பதே வழக்கம். - அண்ணன் தன் தங்கையை அம்மா என்றே அழைக்கின்றான்; தந்தை தம் பெண்ணை அம்மா என்றே கூப்பிடுகிறார். மனை யாட்டியைத் தவிர மற்ற பெண்கள் எல்லாரும் அம்மாவே. காமத்தை வெல்ல வேண்டியவர்கள் உலகிலுள்ள பெண் களைத் தாயாகப் பார்க்க வேண்டும்; தாயாகப் பழக வேண்டும்; தாயிடம் பேசுவது போலப் பேசவேண்டும். பெண்டாட்டி என்ற சொல்லுக்கு இயல்பான பொருள் பெண் என்பதுதான். ஆனால் அதற்கு இப்போது மனைவி என்ற பொருள் வந்துவிட்டது. மனைவி ஒருத்தியைத்தான் பெண்ணாகக் கண்டார்கள்; சொன்னார்கள். திருநெல்வேலியிலுள்ள அந்தணர்கள் மனைவியைப் பெண்ணாய்ப் பிறந்தவள் என்பார்கள். அதுவும் இந்தக் கருத்தையே புலப்படுத்தும். பெரியவர்கள் எத்தனை பெண்களைப் பார்த்தாலும் மனைவி ஒருத்தியைத்தான் பெண்பாலாகப் பார்த்தார்கள்; மற்றவர்களைத் தாயாகப் பார்த்தார்கள். பேராண்மை வள்ளுவர் ஒன்று சொல்கிறார். மனிதன் இரண்டு விதமான வீரம் உடையவன்; புற வீரம் ஒன்று; அகவீரம் ஒன்று. உடம்பின் ஆற்றலால் தன்னை எதிர்க்கின்றவர்களோடு போராடி வெல்வது புறவீரம். அகவீரம் என்பது காமத்தை வெல்லும் வீரம். உலகி லுள்ள பெண்களைத் தாயாகப் பாவித்துத் தன் உள்ளத்தில் எழுகின்ற வெங்காமத்தைப் பொசுக்கி வெல்கின்ற வீரமே அக வீரம். அகப்பகையை வென்றவர்கள் முனிவர்கள். புறப்பகையை 315