பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அடக்கும் ஆண்மை உடையவர்களுக்கும், வீரம் மிக்கவர்களுக்கும் உட்பகையாகிய காமத்தை அடக்குவது அருமை. புறப்பகையை அடக்க ஆண்மை வேண்டுமென்றால் அகப்பகையை அடக்கப் பேராண்மை வேண்டும். அகப்பகையை வென்றவர் மாபெரும் வீரர். வள்ளுவர் சொல்கிறார் : 'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ ஆன்ற ஒழுக்கு." 'பிறன் மனையாட்டியைப் பார்க்காத பேராண்மை உடைய வர்களுக்கு அறனுமாம்; நிரம்பிய ஒழுக்கமுமாம்' என்கிறார். லட்சுமணன் இயல்பு லட்சுமணண் அப்படி இருந்தான். சீதா பிராட்டியை இராவணன் தூக்கிச் சென்றபோது, தன்னைத் தூக்கிச் செல்லும் வழி இராமனுக்குத் தெரியட்டும் என்பதற்காகத் தன்னுடைய ஒளிமிக்க அணிகளை ஒவ்வொன்றாகக் கழற்றிப் போட்டுக் கொண்டே சென்றாள். அவற்றையெல்லாம் அநுமான் பொறுக்கிச் சேர்த்து வைத்திருந்தான். கிஷ்கிந்தாபுரிக்கு இராம லட்சுமணர் வந்தபோது அவ்வணிகளை அவர்களிடம் கொடுத்தான். இராமன் அவை சீதையுடையன என்பதை அறிந்து வருந்தினான். காதணியை எடுத்துப் பார்த்தான்; கழுத்து ஆபரணத்தை எடுத்துப் பார்த்தான்; கை வளையல்களை எடுத்துப் பார்த்தான். சீதையினுடைய முழு உருவமும் அவன் உளக் கண்ணின் முன்னே தோன்றி அவனை வருத்தியது. 'தம்பி லட்சுமணா, இந்த ஆபரணங்களை எல்லாம் பார்த்தாயா? இவையாவும் உன் அண்ணியினுடையவை அல்லவா?" எனத் தாங்கமாட்டாத துக்கத்தோடு கேட்டான். லட்சுமணன் தோட்டை எடுத்து விலக்கி அப்பால் வைத்தான். மாலைகளை எடுத்து விலக்கி அப்பால் வைத்தான்; வளையல் களை எடுத்து அப்பால் வைத்தான். காலில் அணியும் சிலம்பை எடுத்தான். 'அண்ணா! இது அண்ணியுடையதுதான்' என்று சொன்னான். தன் அண்ணியின் பாதத்தைத் தவிர வேறு உறுப்பை அவன் ஏறெடுத்தும் பார்க்காமல் பாத சேவை மாத்திரம் பண்ணியவன். ஆகவே பிராட்டியின் மற்ற அங்கங்களில் அணிந்து கொண்டிருந்த 316