பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் இது சிதம்பர சம்பந்தமான கோவை; ஆதலின் சிதம் பரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். புலியூர் என்பது சிதம்பரம். "சிதம்பரத்தில் தன் வேலைகளை விட்டுவிட்டு என்னை ஆளும் பொருட்டு நின்று ஆட்கொண்ட சிவபிரானுக்குரிய மலையில், சிங்கத்தைப்போல இருந்த ஒரு வீரனைக் கண்டேன்." பார்த்ததைச் சொல்ல வேண்டும் என்று ஆசை. பாட்டியோ தன் பெண்ணைப் பார்த்தாயா என்று கேட்கும் விருப்ப முடையவள். ஆனாலும் அது முறையன்று என்று, இரண்டு பேர் களைப் பார்த்தாயா என்று கேட்கிறாள். அவனோ பெண்ணைப் பற்றிச் சொல்லவில்லை. 'ஆளியன்னானைக் கண்டேன்' என்று சொல்கிறான். அந்த அம்மாள் தேடி வந்தது தன் பெண்ணை, ஆனால் இவன் ஆணைக் கண்டேன் என்கிறான். அவள் திருப்தி அடைந்து விடுவாளா? மாட்டாள் என அவனுக்கே தெரியும். அவன் ஏன் அப்படிச் சொன்னான்? ஆடவனைத்தான் அவன் பார்த்தான். பார்த்ததைச் சொல்லிவிட்டான். ஆனால் அவளை இவன் பார்க்கவில்லை. அதனால் அதைச் சொல்லவில்லை. அந்தச் செவிலியின் உளம் குளிர வேண்டுமே. அந்தப் பெண்ணை இவன் காதலி பார்த்திருப்பாள். அவளைச் சொல்லும்படி சொல் கிறான். 'ஆளியன்னானைக்கண் டேன்; அயலே தூண்டா விளக்கனை யாய்என்னை யோஅன்னை சொல்லியதே." 'தூண்டா விளக்குப் போன்றவளே. அம்மா ஏதோ சொன் னாளே” என்று அவன் சொன்னான். அவன் அந்தப் பெண்ணைப் பார்க்கவில்லை. பார்த்தவளைச் சொல்லச் சொல்கிறான். "வேறு பெண்ணையே பார்க்காதவன் என்றால் அவனிடம் எதிரே நின்று இத்தனை நேரமும் பேசுபவள் பெண்தானே? அவளைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுதான் பேசி னானோ?” என்று கேட்கலாம். அவன் எதிரே நின்றவளைப் பார்த்தான். பெண்ணாகப் பார்க்கவில்லை. தாயாகப் பார்த்தான். அது எப்படித் தெரிகிறது? 31.9