பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 'விரிவான நூல்களைப் பலர் எழுதியிருக்கிறார்களே, அவற்றையே நாம் குரு உபதேசமாகக் கொள்ளக் கூடாதா, குருவை நேரிலே அடைந்து உபதேசம் பெற வேண்டும் என்பது என்ன அவசியம்?' என்று சிலருக்குத் தோன்றுகிறது. செட்டியார் விருந்து ஒரு செட்டியார் மண்டிக் கடை வைத்திருக்கிறார். அவர் உயர்ந்த சம்பா அரிசி வியாபாரம் பண்ணுகிறார். ஊரில் உள்ளவர் கள் எல்லோரும் அந்தக் கடையில்தான் அரிசி வாங்குகிறார்கள் அரிசி வாங்கியவர்கள் அதை அப்படியே சாப்பிட முடிகிறதா? தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று, தங்கள் குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப அரிசியை எடுத்துச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஒருவர் செட்டியாருடைய விருந்தினராக அவர் வீட்டுக்குப் போகிறார். அப்போது செட்டியார் என்ன செய்கிறார் கடையில் இருக்கும் அரிசியை எடுத்தும் தம் வீட்டிலேயே சமைக்கச் சொல்லி விருந்தினருக்கு வேண்டிய அமுது படைக்கிறார். ஊருக்கு எல்லாம் அரிசி வியாபாரம் செய்யும் செட்டியார் தம் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு அதே சம்பா அரிசியைக் கொண்டு அன்னம் படைக்கிறார். - எல்லோருக்கும் அரிசி தருவது பொதுவான வேலை; தம் வீட்டிற்கு வருபவருக்குச் சாப்பாடு போடுவது சிறப்பான செயல். பொதுவான அநுபவத்தையும், சிறப்பான அதுபவத்தையும் தருபவர் செட்டியார்தாம். அப்படியே, பெரியவர்கள் எழுதி வைத்திருக்கும் நூல்களில் உள்ளவை பொதுவான உபதேசம். ஆனால் அவர்களிடமே நேரில் சென்றால் அவர்கள் செய்வது சிறப்பான உபதேசம். இன்ன பக்குவம் உடையவர் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி செய்யும் உபதேசம் சிறப்பான உபதேசம். அந்த உபதேசப்படி நடப்பவர்களுக்கு வெவ்வேறு அநுபவம் விளையும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவன் அவனுடைய நிலைக்கு ஏற்றபடி அநுபவம் உண்டாகும். பலவகைப் பயிற்சி மாம்பழத்தை ஒருவன் நறுக்கிச் சாப்பிடுகிறான். மற்றொருவன். அப்படியே கடித்துச் சாப்பிடுகிறான். மூன்றாமவன் சாற்றைப் 324