பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் உறுப்பினனாகி, தலைவனாகி, சட்டசபை அங்கத்தினனாகி, மந்திரி யாகவும் வந்துவிடுகிறான். இது போன்ற வளர்ச்சி முறை மனப் பண்பாட்டினால் உண்டாக வேண்டும். சமூகத்தாரின் கண்ணில் இழ்ச்சாதியில் பிறந்தவன் நந்தன். ஆனால் அவனைக் காட்டிலும் உயர்ந்த வேதியர் யாராவது உண்டா? கண்ணப்பன் வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவன்தான். ஆனால் அவனைக் காட்டிலும் உயர்ந்தவர் யாராவது உண்டா? அவர்களுடைய மனநலம் வளர்ச்சி பெற்றது. 'மனநலம் மன்னுயிர்க் காக்கம்' என்பது குறள். சூர்தாஸ் உடம்பு வளர்வதும் உறுப்பு நலனும் மனித வளர்ச்சி என்று உலகம் நினைத்து ஏமாந்து போகிறது. நான் ஒரு சித்திரம் பார்த்தேன். அது சூர்தாஸ் என்பவரின் படம். சூர்தாஸ் பெரிய கவி. அதைவிட அவர் பெரிய பக்தர். அவர் கண் இல்லாதவர். 'இந்தப் பாழான உலகத்தைப் புறக்கண் கொண்டு பார்த்து மயங்க மாட்டேன். கருணை ஒளி வீசும் எம்பெருமான் திருவுருவத்தை அகக் கண் கொண்டு பார்ப்பேன்" என்று இருந்தார் போலும்! அவர் உடம்பு எலும் பெடுத்து வளப்பமின்றி இருக்கிறது. புறப்பார்வையே இன்றிக் கையில் தம்புராவை மீட்டிக் கொண்டு பாடுகிறார். அவருக்கு முன்னே உட்கார்ந்து கொண்டு கண்ணன் மிகவும் பய பக்தியோடு அவர் பாட்டைக் கேட்கிறான். இதைப் படம் காட்டுகிறது. வெளியே அமர்ந்து கேட்டது போதாது என்று கருதி அந்த இருதயத்தின் பெருமையை உணர வேண்டுவான் போல அந்தச் சரீரத்திற்குள்ளும் நின்று கேட்கிறான். அதைப் படத்தில் காண முடியாது. பார்ப்போர்களின் மனம் உருகும் வகை யில் அந்தப் படம் இருக்கிறது. அவரது உடம்பு மெலிவானது; அவருக்குப் புறக் கண் இல்லை. ஆனால் அவர் உள்ளத்திலே தான் எவ்வளவு பெரிய கண் கண்ணனையே கண்ணாகக் கொண்ட உடம்பு அல்லவா அது? 'உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னார் உடைத்து' க.சொ.11-22 327