பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 என்கிறார் வள்ளுவர். 'புறக்கண்களால் பார்க்கும் உருவத்தைக் கண்டு மயங்காதே. தேர் பெரியது. அச்சாணி எவ்வளவு சிறியது அதுபோன்ற மனிதர்கள் இருக்கிறார்கள்” என்று கூறுகிறார். அது; தியர் வரலாற்றைப் பாருங்கள். எம்பெருமானின் திருமணத்தின் போது வானவர்களும், பூவுலகத்தினரும் திருமணக் கோலம் கண்டுகளிக்க இமயமலைக்கு வந்து கூடிவிட்டார்கள். வடநாடு தாழ்ந்ததால் தென்னாடு உயர்ந்துவிட்டது. இதைச் சமன்படுத்த உருவத்தால் சிறுத்த அகத்திய முனிவரை எம்பெருமான் தென்னாடு அனுப்பவில்லையா? சின்னஞ்சிறு குறுமுனிவர், தமிழ் நூலை நமக்குத் தந்த குரு முனிவர், உருவைக் கண்டு எள்ளாமை வேண்டும் என்பதற்குச் சான்றாக நிற்கிறார். அகத்திய முனிவர் தனியாகத் தான் தென்னாடு வந்தார். நிலம் சமன்பட்டு விட்டது. அது அவரது உடம்பின் வல்லமையா? அவர் உள்ளம் பெரியது. மனத்தின் வன்மை அதிகமாக, திடம் அதிகமாக, பண்பு செறிந்து வளர்ந்து நிற்கும். முயற்சியும் பண்பும் நம்முடைய முயற்சிகள் பயன்பெற்று வந்தால் நம் பண்பு வளர்ந்து வரும். மனத்தில் உறுதி தோன்றும். ஆண்டவனது அருள் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றும். ஆண்டவன் இருக்கிறான் என்று பிறர் சொல்லக் கேட்கிறோம். நமக்கு அதில் முழு நம்பிக்கை இல்லை. சந்தேகம் இருந்து கொண்டே இருக் கிறது. அந்தச் சந்தேகம் கழல வேண்டும். ஆண்டவன் இருக் கிறான்; காணாத குறை நம்முடையதே. அவன் எங்கே, எங்கே, எங்கே என்ற கேள்வி தொடங்கும்போது நம்பிக்கை உதயமாகும். கேள்விக் குறியைப் போட்டுக் கொண்டே போனால் பயன் இல்லை. கேள்விக்குப் பதிலை அளிக்கும் குருநாதரை அண்டி, அவர் காட்டும் நெறியிலே, சீலத்திலே ஒழுகி நின்றால் பயன் உண்டு. அப்பால், இனி நமக்குப் பயம் இல்லை என்ற நினைவு உறுதிப்படும். எடுத்த பிறவியையும் சீரணம் பண்ணி விட்டோம் என்ற எண்ணம் திடப்படும். மனத்திடம் என்பது ஒரு நாளில் வராது. உடற்பயிற்சி செய் பவர்களுக்கு உடல் வன்மை ஒரே நாளில் வந்துவிடுகிறதா? பயிற்சியை விடாமல் செய்யச் செய்யப் படிப்படியாகத்தான் 328