பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் உடல் வலுப்பெறுகிறது. அதைப் போலவே மனம் திடப்படவும் படிப்படியாக விடாமல் சாதனம் செய்ய வேண்டும். இறைவன் திருவருளை நம்பியிருந்தால் இடையில் தடை ஏற்படாது. பல காலமாக உலகத்து மாயையில் சிக்கிச் சுழன்ற மனத்தில் படிந்துள்ள பழைய வாசனை மறைய வேண்டுமென்றால் பல கால உழைப்பு வேண்டும். அந்த உழைப்பினால் பழைய வாசனை அற்றுப் போகச் செய்து, மனத்தையே நாசம் செய்பவர்கள் ஜீவன் முக்தர்கள். அத்தகைய நிலை எய்வதற்குரிய நெறியில் முதல்படி இறைவனிடத்தில் கொள்ளும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையினால் திடம் வரும். ஒன்றை ஒன்றாகப் பார்த்து மயங்குகின்ற தன்மை ஒழியும். அந்தத் திடம் உண்மையாக இருந்தால் அதைப் புணை யாகக் கொண்டு பிறவிப் பெருங் கடலை நீந்தி விடலாம். அருணகிரிநாதர் சென்ற பாட்டிலே, நான் வெங்காம சமுத்திரத்தைக் கடந்து விட்டேன்' என்று சொன்னார். அதைக் கடப்பதற்கு உரிய புணையாகிய சித்தத் திடம் அவருக்கு எப்படி உண்டாயிற்று? இந்தக் கேள்விக்குரிய விடையைத் தம் மனத்தைப் பார்த்துச் சொல்வது போல, இந்தப் பாட்டைப் பாடுகிறார். மனம் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யவில்லை. எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்கிறது. இப்படி உள்ள மனத்தைப் பார்த்து, மனமே, எங்ங்னே, முத்தி காண்பதுவே? என இரங்குகிறார். மனம் என்ன செய்கிறது? பாலென் பதுமொழி, பஞ்சென் பதுபதம் பாவையர்கண் சேல்என்பதாகத் திரிகின்றது. அப்படியானால் அருணகிரியார் பாவையர் மொழியைக் கேட்கின்ற காதைப் பார்த்துச் சொல்லி இருக்கலாமே, பாவையர் மேனியைத் தொட்டுப் பார்க்கின்ற கையைப் பார்த்துச் சொல்லி யிருக்கலாமே, பாவையர் அழகைப் பருகுகின்ற கண்ணைப் பார்த்துச் சொல்லி இருக்கலாமே. மனத்தைப் பார்த்து ஏன் சொல்கிறார்? மனமும் பொறிகளும் கண் பார்க்கிறது: "நான் பார்த்தேன்' என்று சொல்கிறோம். காது கேட்கிறது; நான் கேட்டேன்' என்று சொல்கிறோம். 329