பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கண்ணையும் காதையும் கருவியாகக் கொண்டு நான் என்பது பார்க்கிறது; கேட்கிறது. ஐந்து பொறிகள் மாத்திரம் இருந்து உயிர் இல்லாவிட்டால் இவை இயங்கா. உயிரும், கண்ணும் இருந்தால் பார்க்கலாம் என்று சொல்லலாமா? எதையோ ஒன்றை நினைத்துக் கொண்டு ஒருவன் போய்க் கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரிலே போகின்ற நம்மை அவன் பார்ப்பது இல்லை. நம் மேல் அவன் கண் படாமல் இல்லை. ஆனால் அவன் மனம் கண்ணோடு ஒன்றி நம்மைப் பார்க்கவில்லை. கண்ணை வாயிலாகக் கொண்டு மனம் இயங்கவில்லை. மனம் எதையோ நினைத்துக் கொண் டிருக்கிறது. மனம் ஆகிய ஒன்று, கண் காது ஆகிய இந்திரியங்களை வாயிலாகக் கொண்டு இயங்கும்போதுதான் பார்க்கிறேன், கேட் கிறேன் என்றெல்லாம் சொல்கிறான். அதனால் எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் மனத்தைப் பார்த்து, 'நீ இப்படிச் செய்ய வில்லையே! என்று சொல்கிறார். அது ஒரு காரியம் செய்கிறது; மற்றொரு காரியம் செய்ய வில்லை. அது செய்கிற காரியம் என்ன? பாலென் பதுமொழி, பஞ்சென் பதுபதம், பாவையர்கண் சேல்என்பதாகத் திரிகின்றநீ. நீ என்று மனத்தைச் சுட்டுகிறார். அது எப்போதும் திரிந்து கொண்டே இருக்கிறது. ஒன்றை நினைக்காமல் பலபல பொருள் களைப் பற்றி நினைந்து திரிகின்றது. மனத்திற்கு அதுதான் வேலை. மனம் வாயுவின் பகுதி; ஆகையால் அது சலித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கணம் கூட ஒரு நிலையில் நிற்பதில்லை. மனத்தை நிறுத்துவது எளிய காரியம் அன்று. பூனையை யானை ஆக்கி விடுகிறேன் என்பான். யானையை ஒட்டகமாக்கி விடுவேன் என்பான். இந்திர ஜாலவித்தை காட்டுவேன் எனப் பேசுவான். ஆனால் ஒன்றையும் பேசாமல், நினையாமல் மனம் ஒய்வாக நிற்க ஒருகணம்கூட இருக்கமாட்டான். 'சினம் இறக்கக் கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே?” என்று தாயுமானவர் பாடுகிறார். மனத்தை அடக்கும் சித்தியே மிக மிகப் பெரிய சித்தி. இறைவன் திருவருளினால் அது கைகூட 330