பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் கூத்து அதற்கு இடமாக இருப்பது பூமி. பூமியிலே பாசம் நிரம்பி வாழ்க்கையில் ஐம்பொறிகள் மனத்தை ஆட்ட நான் ஆடுகிறேன். சுழற்சியை அடைந்த பாச நெஞ்சினை உடைய பாவியாக நான் இருக்கிறேன். இப்பாச நெஞ்சனை ஈடேற்ற மாட்டாயா?" என்று பிரார்த்தனை செய்கிறார் அருணகிரியார். குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரிற் கொட்படைந்த இப்பாச நெஞ்சனை ஈடேற்றுவாய். அருணகிரியாரே 'கொட்பு அடைந்த நெஞ்சினை உடைய வனாக இருக்கிறேனே! என்று சொன்னால் நாம் எல்லாரும் எங்கே இருக்க வேண்டும்? நாம் ஒரு கணம்கூட இறைவனை நினைந்து அறியாதவர்கள். ஐந்து இந்திரியங்களுக்கும் அப்பாற் பட்டு இருக்கிற ஒருவனை, ஐந்து இந்திரியங்களுக்கும் உட்பட்டு எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் நெஞ்சுடைய நம்மால் நினைக்கத்தான் முடியுமா? அவனை நினைக்க வேண்டுமென் றால் இந்திரியங்கள் நமக்கு அடங்கினவை ஆக வேண்டும். நாம் அலங்காரம், ம.மகாரம் அடங்கினவர்களாக ஆகவேண்டும். இந்தச் சுழற்சி நீங்க வேண்டும். யாரை வேண்டியனால் சுழற்சி நீங்கும்? நம்மை ஆட்டி வைக்கின்ற ஐந்து பேர்களின் கொட்டம் அடங்க, இந்த ஐந்து பேருக்கும் அப்பாற்பட்ட வேறு ஒருவன் அருள் வேண்டும். அவன் யார்? அவனே முருகன். அவன் ஐந்து பேரை அடக்கும் ஆற்றல் படைத்தவன். 2 ஐவரை அடக்கியவன் கந்தப் பெருமான் அசுரர்களோடு போர் செய்து அவர்களைச் சங்காரம் செய்தான். பல வெள்ளக்கணக்கான அசுரர்கள் இருந் தாலும் அந்தப் படைக்குத் தலைவனாக இருந்தவன் சூரன். அவனுக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் சேர்த்தால் பெருந் தலைவர்கள் ஐவர் ஆவார்கள். தாரகாசுரன் ஒருவன்; யானைமுகம் படைத்தவன்; அவன் சூரனுக்குச் சகோதரன். சிங்கமுகாசுரன் மற்றொரு சகோதரன். கிரெளஞ்சாசுரன் சூரனுக்குக் கவசம் க.சொ.11-3 23