பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 மலர்ச்சியாகப் பெண்களின் முகங்கள் இருக்கின்றன? என்று வருணிக்கிறான். அதையே ஒரு பக்தன் பார்க்கிறான்; “இன்பத் தேனைச் சொரிந்து பக்தர்களை வா, வா என்று வருந்தி அழைத் கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைப் போலல்லவா வண்டு களை அழைக்கும் அரவிந்தம் இருக்கிறது?’ என்று பரவசமாடு நிற்கிறான். நினைக்கின்ற நினைப்பை நல்லதாக்கிக் கொண்டவன் பக்தன். ஆதலால் தாமரையைப் பார்க்கும்போது எம்பெருமானுடைய திருவடி மலர்களை நினைக்கிறான். இப்படி எங்கெங்கோ போகின்ற நினைவை மடைமாற்றி இறைவனைப்பற்றி நினைக்கப் பழகினால் கடைசியில் நேரே இறைவனை நினைக்கிற நிலைக்கு மனம் வந்து விடும். குழந்தையும் பசியும் சின்னக் குழந்தை; விளையாட்டுப் புத்தியுள்ள குழந்தை; எப்போதும் வீதியிலே விளையாடிக் கொண்டிருக்கிறது. சாப்பிடு கிற வேளையில்கூட உள்ளே வராமல் விளையாடுகிறது. தாய் கிண்ணத்தில் உணவைப் பிசைந்து எடுத்துச் சென்று குழந்தையை இழுத்துவந்து ஊட்டுகிறாள். ஒரு வாய் சாப்பிடுகிறது; மறுபடி யும் ஒடிவிடுகிறது. திரும்பவும் இழுத்துவந்து ஊட்டுகிறாள். விளையாட்டுத் தோழர்கள் போய்விடுவார்களே என அந்தப் பிடியை வாங்கிக் கொண்டு ஒடப் பார்க்கிறது. ஒர் அடி அடித்து, "அவர்கள் இருப்பார்கள், சாப்பிட்டுவிட்டுப் போ' என்று தாய் அதட்டுகிறாள். தாய்க்குப் பயந்துகொண்டு உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் வாயை வாயைத் திறக்கிறது குழந்தை. ஆனால் அதன் கண் வீதியிலேயே இருக்கிறது. 'உம்' எனத் தாய் அதட்டுகிறாள். அவள் முகத்தைப் பார்க்கிறது குழந்தை. அவள் கொடுக்கும் உணவை ஆடாமல் அசையாமல் சாப்பிடுகிறது. அந்தக் குழந்தை சாப்பாட்டின் சுவையை ரசித்துச் சாப்பிடப் பழகிவிட்டால் அப்புறம் மிக்க பசி வந்த பொழுது தாயைச் சுற்றிச் சுற்றி அடுக்களையில் வருமே தவிர, விளையாடப் போ, போ என்று சொன்னாலும் போகுமா? யார் வந்து கூப்பிட்டாலும் போகாது. "இன்னும் போடு; இன்னும் போடு' என்று சொல்லிக் கொண்டே உண்ணும். - - 332