பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இறக்கும்போது இறைவன் நினைப்பு வரவேண்டுமானால் காலையும் மாலையும் அவனை நினைந்து பழக வேண்டும். பார்க்கின்ற பொருள்களை எல்லாம் அவனோடு சம்பந்தப்படுத்இப் பார்க்க வேண்டும். அவன் உருவத்தைக் கண்டு கண்டு அதை உள். வாங்கிக்கொண்டு அகக் கண்ணால் பார்க்க வேண்டும். வீட்டில் குழந்தை அழுகிறது. தாய் ஏதேதோ வேலை செய்து கொண்டே இருக்கிறாளே தவிர அதைப் போய் எடுக்க வேண்டு மென்ற பரபரப்பு ஏற்படுவது இல்லை. ஆனால் குழந்தையின் அழுகுரல் வீதிப் பக்கம் இருந்து வருகிறது. அப்போது தாய் அலறி அடித்துக்கொண்டு ஒடுகிறாள். அதே போல இறைவனது அற்புதமான திருவுருவத்தைத் தியானம் பண்ண வேண்டுமென்ற ஆசை இருக்கிறவர்கள் அது நழுவும்போது மிக்க கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நழுவாதிருக்கத் திரும்பத் திரும்ப ஓடிப்போய் அத்திருவுருவத்தைப் பார்க்க வேண்டும். பார்க்கின்ற பொருள்களிலெல்லாம் அத் திருவுருவத்தை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். 'உயிரா வனமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியில் உருவெழுதி' என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். மூச்சுக்கூட விடாமல் எம்பெருமான் திருவுருவத்தை உள்ளத்தில் வைத்துத் தியானிக்க வேண்டும். அவன் உருவம் காண்பதற்கான சாதனையைப் படிப்படி யாகச் செய்ய வேண்டும். அந்தத் தியானத்திற்கு எது தடையாக இருக்கிறதோ அதை நீக்குவது எளிது அன்று. ஒன்றை நினைக் கின்ற மனத்தை எதையும் நினைக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக, 'இதை நினை' என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்கிறார் அருணகிரியார். மூன்று முறிவு - மக்களுக்குத் தாம் அநுபவிக்கும் பொருளைப்பற்றிச் சிறப் பித்துப் பேச ஆசை உண்டாவது இயல்பு. மகளிரை எத்தனையோ வகையில் வருணனை செய்யத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். 334