பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் அருணகிரியார், 'பாவையர்கள் பேசுகின்ற மொழியைக் கேட்டுப் பால் என்கிறாயே. அவர்களது ஒயிலான நடையைப் பார்த்து அவர்கள் பாதம் பஞ்சு என்கிறாயே. அவர்களது கண்களைப் பார்த்துச் சேல் போல் இருக்கின்றன என்கிறாயே. இந்த மூன்றுக்கும் மூன்று முறிவு சொல்லித்தருகிறேன்" என்று சொல் வாரைப் போலப் பேசுகிறார். அருணகிரியார் பெண்ணைப் பற்றிச் சொல்லுவன கற்புடைய மகளிரைப்பற்றி யல்ல என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அறத்தின் வழியே இன்பம் நுகர்பவர்களைப் பற்றி அவர் சொல்லவில்லை. காமத்தினால் அலைப்புண்டு புறப்பார்வையில் மனத்தைப் பறிகொடுத்து, இந்திரியங்களின் வசப்பட்டுத் திண்டாடிச் சந்தியில் நிற்கின்றவர்களைப் பற்றியே பேசுகின்றார். கண்ணா லும், மேனி மினுக்காலும் உலகோரின் மனத்தை மயக்கும் பாவையர்களைப் பற்றியே பேசுகின்றார். இத்தகைய பாவையர்கள் எல்லாக் காலத்தும், எல்லா இடத்தும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உலகத்தில் பிறந்து வாழ்கின்ற மனிதர்கள் யாரும் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க முடியும் எனச் சொல்ல முடியாது. அவர் களையே பார்க்கக் கூடாது எனவும் சொல்லவில்லை. பார்க்கலாம். அதனால் தீங்கு வரக்கூடாது என்றால் என்ன செய்யவேண்டும்? பாவையர்கள் மொழியைக் கேட்கும்போதும், ஒயிலான நடையையும் வாள் போன்ற விழியையும் பார்க்கும் போதும் இறைவனைப் பற்றிய நினைவு வரும்படி செய்ய வேண்டும். அதற்கான வழியை அருணகிரியார் இங்கே சொல்கிறார். பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர்கண் சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்திருக்கை வேல்என் கிலைகொற்ற மாயூரம் என்கிலை வெட்சித்தண்டைக் கால்என் கிலைமன மே,எங்ங் னேமுத்தி காண்பதுவே? 335