பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் அவர்கள் கண்ணைப் பார்த்துச் சேல் என்கிறாயே. வாள் விழி, வேல் விழி என்று வருணிப்பது இல்லையா? வேல் என்று நினை; சாதாரண வேலை நினைக்காதே; எம்பெருமான் திருக் கரத்தில் உள்ள வேலை நினை. செந்திலோன் திருக்கை வேல் என்று நினைத்தால் காமம் தோன்றாது. அப் பாவையர் பாதம் மென்மையாக இருக்கிறது, பஞ்சு போல் இருக்கிறது என்கிறாயே. அது நடக்கும் பாதம் அல்லவா? பெண்களின் நடை மயிலின் நடை என்பார்களே. மயில் மென்மை யாக இல்லையா? பதம் பஞ்சு என்று நினைப்பதைத் தவிர்த்துக் கொற்ற மாயூரம் என்று நினைக்கக் கூடாதா?” பஞ்சென் பதுபதம்.... என்பதாகத் திரிகின்ற நீசெந்திலோன்...கொற்ற மாயூரம் என்கிலை. அவர்களது இனிய மொழியைக் கேட்டுப் பால் என்கிறாயே. அப் பாவையரது மொழியின் இனிமை உனக்குப் பாலைத்தானே நினைவுறுத்துகிறது? எம்பெருமானின் திருவடியில் அணிந்துள்ள தண்டையின் இனிமையான ஒலி உன் நினைவுக்கு வரவில்லையே! மொழியின் ஒலியில் முருகன் தண்டை ஒலியை நினைக்கலாமே." பால்என் பதுமொழி.... என்பதாகத் திரிகின்ற நீசெந்திலோன் வெட்சித் தண்டைக் கால்என்கிலை. அவகாமமும் சிவகாமமும் பாவையர்களைக் காண்பது தவறு அல்ல. அவர்களது இனிமையான மொழியைக் கேட்பதும் தவறல்ல. கேட்பதாலும், பார்ப்பதாலும், தொடுவதாலும் நமக்குப் பால், சேல், பஞ்சு ஆகியவை நினைவுக்கு வந்தால் உள்ளத்தில் அவகாமந்தான் எழும்பும். அவகாமம் ஒழிந்து சிவகாமம் எழவேண்டுமானால் செந்திலோன் திருக்கை வேல், கொற்ற மாயூரம், வெட்சித் தண்டைக் கால் நினைவுக்கு வரவேண்டும். உலகிலுள்ள பொருள் களை நம்முடைய இன்பத்திற்கு உரிய பொருளாகப் பார்க்கும் வரையில் நம் உள்ளத்தடத்தில் அவகாமந்தான் பொங்கும். அவை 337