பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிலும் வீடும் உடம்பு நோயும் மன நோயும் இந்த உடம்பு நோய் இல்லாமல் இருந்தால் இதிலேயே பல காலம் வாழலாம் என்று சில சமயம் தோன்றுகிறது. உடம்புக்கு நோய் வந்தால்தான் துன்பம் என்று எண்ணுவது தவறு. நோய் இல்லாத உடம்பினாலும் துன்பந்தான். நோயினால் அலைப் புண்ணுகிறவன் அதனால் ஏற்படும் வேதனையைத் தாங்கமாட்டாமல் ஐயோ ஐயோ என்று அலறுகிறான். நோயில்லாதவனோ மனம் போன போக்கெல்லாம் போய் அதனால் வருகின்ற துன்பத்தைத் தாங்க மாட்டாமல் அலறுகிறான். இந்த உடம்பு நன்றாக இருந்தால் போதாது; மனம் நல்ல வழியில் சென்றால்தான் இன்பம் உண்டாகும்; தீய வழியில் செல்லும்போது அதன் விளைவான துன்பத்தை அநுபவித்து அல்லலுறுகிறது. ஆகவே நோய் இல்லாத உடம்பைப் பெற்றோம் என்று களிப்பது முறை ஆகாது. நோய் இல்லாத மனமும் வேண்டும். பிறவித் துன்பம் சின்னஞ் சிறிய இலைகளை விரித்துக்கொண்டு புல் முளைத்தது. அதைப் போய் ஆடு கடித்தது. அந்தத் துன்பத்தைச் சகிக்கமாட்டாத புல், 'ஆண்டவனே, என்னை இத்தனை சிறிய புல்லாக்கி விட்டாயே! அதனால் அல்லவா இந்த ஆடுகள் என்னைக் கடிக் கின்றன? பெரிய மரமாக நான் வளரும்படியாகச் செய்து விட்டால் இந்த ஆடுமாடுகளால் அழிக்க முடியாதே' என நினைந்து வேண்டியது. ஆண்டவன் அதை மரமாக்கிவிட்டான். மரமாக வளர்ந்த பிறகும் அதற்குத் துன்பம் நீங்கவில்லை. யார் யாரோ மரத்தின் மேலேறி அதன் கப்புகளையும் கிளைகளையும் வெட்டினார்கள். மரம் வலி பொறுக்க மாட்டாமல் அலறியது. அப்போது மரத்தின்மேல் ஏறியவர்கள் அங்கே ஒரு பாம்பைக் கண்டு அலறிக் கொண்டு ஓடினார்கள். அதைப் பார்த்ததும் மரத்துக்கு ஒரு நினைவு உண்டாயிற்று; "ஆண்டவனே, புல்லாக இருந்தேன்; ஆடுகள் கடித்துத் துன்புறுத்தின. அதனால் மரம் ஆக்கச் சொன்னேன்; மரமாக்கினாய். இப்போது என் கப்புக் கிளைகளை எல்லாம் வெட்டித் துன்புறுத்துகிறார்களே! இவர் களுக்குப் பயந்து ஒடலாம் என்றால் என்னால் நகர முடிய வில்லையே! என்னை ஊர்ந்து செல்லும் பாம்பாக ஆக்கி விடக் 347