பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 'தண்டா யுதமும் திரிசூல மும்விழத் தாக்கிஉன்னைத் திண்டாட வெட்டி விழவிடுவேன்... அந்தகா' என்று எமனைப் பார்த்தே அறை கூவும் நெஞ்சுறுதி உடையவர்க ஆவார்கள். அப்பர், "நாமார்க்கும் குடியல்லாம்” என்றார். 'நாவலிட் டுழிதர் கின்றோம் நமன்றமர் தலைகள் மீதே' என்று ஆழ்வார் பேசுகிறார். அருணகிரியார் வேண்டுகோள் உடம்பாகிய பொக்கக்குடிலை, பொய்யான குடிசையை விட்டு, இறைவனது பேரருளினால் அவனது செக்கச் சிவந்த கழல் வீட்டைப் பெறவேண்டும். இதை வேண்டுகிறார் அருணகிரியார் பொக்கக் குடிலில் புகுதா வகைப்புண்ட ரீகத்தினும் செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள்; சிந்துவெந்து கொக்குத் தறிபட்டு எரிபட்டு உதிரம் குமுகுமெனக் கக்கக் கிரிஉரு வக்கதிர் வேல்தொட்ட காவலனே! பொக்கம் - பொய். 'ஆண்டவனே, இன்பம் அளிப்பது போலத் தோற்றி எப்போதும் துன்பத்தையே அளிக்கின்ற இந்தப் பொய்யான குடில் எனக்கு இனி வேண்டாம். இந்தக் குடிலை விட்டு வந்துவிடு என நீ சொன்னால்தான் என்ன செய்வேன். எனக்கு வேறு வீடு எதுவும் இல்லையே! இன்ப துன்பமற்ற வீட்டை நீ கொடுக்க வேண்டும். உயிர் தனித்திருக்கும் இயல்பு உடையது அல்லவே! பாசத்தோடு ஒட்டி இந்த உடம்பாகிய வீட்டில் அது இருக்கவேண்டும். இல்லையானால் உன் பாதத் தோடு ஒட்டி முத்தி வீட்டில் வாழவேண்டும். உன் கழலே வீடு. அந்த வீட்டை எனக்கு நீ தந்தருள்வாய்' என்று பாடுகிறார். திருவடியே வீடு இறைவன் திருவடியே வீடாக இருக்கும். யாரேனும் பெரியவர் இறந்துபோனால், "அவர் சிவபெருமான் திருவடி நிழல் சேர்ந்தார் என்று பிறருக்கு ஒலை அனுப்புவது வழக்கம். 35O