பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் வேலும் உடம்பு எத்தனைதான் பலம் உடையதாக இருந்தாலும், உடம்பை இயக்குகின்ற மனம் திண்மை அற்ற்தாக இருந்தால் அந்த உடம்பினால் பயன் இல்லை. மனத்தின் பலத்துக்கு ஏற்றபடியே மனிதன் பலம் உடையவனாகிறான். தவத்தின் இலக்கணம் "உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு' என்று வள்ளுவர் தவத்திற்கு இலக்கணம் வகுக்கிறார். தனக்கு எந்த ஊறு வந்தாலும் பொறுத்துக் கொள்ளுதல், பிறருக்குத் தீமை செய்யாமல் இருத்தல் என்று இரண்டு இலக்கணம் சொல்கிறார். முதலில் சொன்னது சகிப்புத் தன்மை. இரண்டாவது சொன்னது அகிம்சை தனக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு, தனக்கு ஊறு செய்தவனுக்கும் தீங்கு நினைக்காமல் வாழ்வது என்பது நல்ல மன வலிமை உடையவர்களால்தான் முடியும். நம் குழந்தை நம்மைக் கிள்ளுகிறது. பதிலுக்கு நாம் குழந்தையையா கிள்ளுகிறோம்? நமக்கு அதன்மேலுள்ள அன்பால் அதனை அனைத்துக் கொள்கிறோம். அதைப் போல பண்புடைய மக்கள் எல்லா மக்களையும் அன்புடன் நேசிப்பதனாலே அவர்களால் தங்களுக்கு வருகின்ற துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு உண்டாகும். திரும்ப அவர்களுக்கு எவ்விதமான தீங்கும் செய்யாமல் அவர்களை அணைத்துக் கொள்கிறார்கள். இப்படி வாழ்வது துறவிகளுடைய நிலைமை. தவமுனிவரின் படைகள் தவவேடம் தாங்கி, தவநெறியில் சென்று எப்போதும் இறைவனையே தியானம் செய்து வாழ்கின்ற துறவிகளுக்குப் பல படைக்கலங்கள் துணையாக இருக்கின்றன. அவர்களுக்குத் தாடி