பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 ஒரு படை. உடம்பில் பூசியிருக்கும் விபூதி ஒரு படை, இடையிலே அணிந்துள்ள ருத்திராட்சம் ஒரு படை. பகைவர்கள் இவற்றைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள். மனவலிமை புறத்திலே துறந்தவர்கள் போலக் கோலங்கொள்வது அகத் திலே கொண்ட திண்மைக்கு அடையாளம். மனத்திற்குள் துறவுத் தன்மை இன்றி வெறும் புறக்கோலம் மாத்திரம் இருந்தால் அவர்கள் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள். உள்ளே பலம் இன்றிப் புறப்படையினால் பயன் இல்லை. 'மனத்தகத்து அழுக்கறுத்த மெளன யோக ஞானிகள் முலைத்தடத் திருப்பினும் மனத்தகத் தழுக்குறார்” என்று பேசுகிறார் சிவ வாக்கியர். மனசிலே மாசு இல்லாதவர்கள் மகளிருக்கு அருகில் இருந்தாலும், அவர்களுடைய மார்பிலே பழகினாலும் மனத்திலே அழுக்கு உறாமல் இருப்பார்களாம். அவர்களே உண்மை ஞானிகள். 'அப்படி உண்டா?' என்று கேட்கலாம். குழந்தைகள் இருப்பது இல்லையா? பெண்களின் மார்பிலே கிடக்கிற குழந்தைகளுக்குக் காம உணர்ச்சி உண்டாவ தில்லை. அந்த நிலையில் இருப்பவர்கள் உண்மை ஞானிகள். அவர்கள் எல்லாவற்றையும் துறந்தவர்கள்; புலன்களை எல்லாம் வென்றவர்கள். f தாக்கும் படை அவர்களையும் கெடுக்கப் பார்க்கிறார்கள் பொல்லாதவர்கள். தவம் செய்கின்றவர்களைக் கெடுக்கப் பொல்லாதவர்கள் இந்தக் காலத்தில்தான் இருக்கிறார்கள் என்பது அல்ல; அந்தக் காலத்தி லும் இருந்தார்கள். அந்தப் பொல்லாதவர்களின் படை திறமையாக வேலை செய்கிறது. முனிவர்கள் பொறிகளை அடக்கியவர்கள்; புலன்களுக்குரிய இன்பங்களை வேண்டாம் என்று உதறிவிட்டு ஓடிவந்தவர்கள்; உடலின்பத்தை நீங்கி நின்றவர்கள். தவவேடம் தாங்கிய வீரர்களாகிய அவர்களைத் தாக்குவதற்கு வருகின்ற படை கண், மகளிருடைய கண். அது எங்கே தாக்குகிறது? வாய்ப்பான இடம் என்று பார்த்துத் தாக்குகிறது. 356