பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 நடுங்கினான். எப்படியாவது இவர் தவத்தைக் கலைத்துவிட்டால் நல்லது; என்ன செய்யலாம்? என்று யோசித்தான். முனிவரின் தவத்தைக் குலைக்க வேண்டுமானால் அவரது மன உறுதியைக் குலைக்கும் ஆற்றலைப் பெற்ற படையை அனுப்ப வேண்டும். துறவியின் உள்ளத்தையும் தகர்க்கும் படை கண்தான். வாள் போன்ற கூர்மையான கண்ணை உடைய தேவலோகத்து மாதர்களில் ஒருத்தியான மேனகையை அனுப்பி வைப்போம் என்று தீர்மானித்தான்; அப்படியே செய்தான். தன் கூர்மையான விழிகளை உருட்டிக் கொண்டு மேனகை விசுவாமித்திரரின் அருகில் வந்து நடனம் ஆடினாள். சதங்கைச் சத்தத்தைக் கேட்டவுடனேயே, "சீ சீ என் தவத்தைக் குலைக்கும் படை வந்துவிட்டதே! இதற்குத் தோற்றுப் போகக் கூடாது. அவளைக் கண்ணால் பார்க்கக் கூடாது; பார்க்கக் கூடாது' என்று விசுவாமித்திரர் தம் கண்களை இறுக மூடிக்கொண்டார். மேனகை யின் சதங்கை ஒலி அவர் உள்ளத்தைப் பிடித்துப் பிடித்து இழுத்தது. 'அவளைப் பார்க்கக் கூடாது, பார்க்கக் கூடாது' என்று அவர் எவ்வளவுக்கு எவ்வளவு எண்ணினாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் உள்ளம் மிக வேகமாகத் துடித்தது; படபட வென்று அடித்துக் கொண்டது. கண் மெல்லத் திறந்து பார்க்க ஆரம்பித்தது. பார்த்தபோது அவர் நெஞ்சு பதைத்தது. அந்த மகாமுனிவரின் பக்கத்தில் வந்துவிட்டாள் மேனகை, 'இது என்ன கோலம்? என்னைப் பாருங்கள் கண்ணுக்கு எதிரே கிடைக்கும் இன்பத்தை உதறலாமா?' என்பதைப் போல அவள் கண் கெஞ்சிக் கொண்டே அவரது உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்துவிட்டது. முதலில் கண்ணைத் திறந்தார். விசுவாமித்திரர். அவளைப் பார்த்தவுடனேயே அவரது உள்ளமும் திறந்துவிட்டது. அந்தத் துறவியை வளைத்துப் பிடித்து, அவரது நெஞ்சம் பதைக்கப் பதைக்க வதைத்தது மேனகையின் கண். விசுவாமித் திரர் மேனகையின் கையைப் பிடித்துக் கொண்டுவிட்டார். அவளுடைய கண்ணாகிய வாட் படைக்கு இளைத்துத் தவித்துத் தோற்றுப் போய் விட்டார் அவர். பலகாலமாகத் தாம் ஆண்ட பெரிய அரசையே வேண்டாம் என்று துறந்து விட்டு வந்த துறவி அவர். பல காலமாகத் தாம் 3ᏮO