பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் வேலும் அநுபவித்த அரண்மனை இன்ட போகங்களை வேண்டாம் என்று துறந்துவிட்டு வந்தவர் அவர். பஞ்சு மெத்தை வேண்டாமென்று கானகத்துக் கட்டாந்தரையைத் தேடி ஓடி வந்த துறவியை, பட்டுப் பட்டாடைகள் எல்லாம் வேண்டாமென்று மரவுரி தரித்துத் தம் உடம்பையே சுமையாகத் தூக்கி வந்த துறவியை, மேனகையின் கண் படை என்ன செய்துவிட்டது அவரது உள்ளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைத்து இளைத்துத் தவிக்கும்படி செய்துவிட்டது. தாடியாகிய படை வைத்திருந்தார்; காவி உடை யாகிய படை வைத்திருந்தார்; வெண்ணிறு ஆகிய படை வைத் திருந்தார்; ருத்திராட்சமாகிய படை வைத்திருந்தார்; தண்டு கமண்டலம் ஆகிய படை வைத்திருந்தார். அத்தனையும் தோற்றுப் போகும்படி செய்து, அவை எல்லாவற்றுக்குமே தலைக்குனிவை உண்டு பண்ணிவிட்டது அந்தக் கண்ணாகிய ஆயுதம். அதற்குக் கிடைத்த வெற்றி தான் சகுந்தலையின் அவதாரம். விசுவாமித்திரர் வசிஷ்டரது தவ வலிமை தமக்கும் வர வேண்டும் என அரசை விட்டு ஓடி வந்து பயன் என்ன? அரண் மனையை விட்டு ஓடி வந்து பயன் என்ன? நாடு நகரம், அரண்மனை, அந்தப்புரம் ஆகிய இன்ப போகங்களை எல்வலாம் வேண்டாமென்று துறந்துவிட்டு வந்து பயன் என்ன? அவரை மேனகையின் கண்ணாகிய படை எளிதில் தோல்வியுறச் செய்து விட்டது. மறுபடியும் தவம் செய்தார். அத்தகைய மாமுனிவரே தோற்றுப் போய்விட்டார் என்றால் சாதாரண மக்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? மங்கையர் கண்ணாகிய படையிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அதையும் விட மிக்க வலிமை உடைய ஆயுதம் நமக்குத் துணையாக வேண்டும். மாரனைச் சங்காரம் செய்த பிறகு தோன்றிய குமாரன் கை வேற் படை துணையாக வந்து ரட்சிக்க வேண்டும் என்று அருணகிரியார் சொல்கிறார். வதைக்கும் கண்ணார் துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு 36i