பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இரு நான்கு வெற்பும் அப்பாதி யாய்விழ. அந்தத் தாக்குதலினால் எட்டுக் குலாசலங்களும் பாதி பாதியாய்ப் பிளந்து விழுகின்றன. சூரன் காணும் காட்சி ஒரு பெரிய மலைக்கு நடுவிலே சூரன் உட்கார்ந்து இருக்கிறான். இடி இடிப்பது போன்ற சத்தம் கேட்கிறது. உடனே மலைகள் பிளந்து பிளந்து விழுகின்றன. அவன் பார்க்கிறான். நாம் போடு கின்ற உத்தரவுப்படி முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது நாம் எந்தவிதமான உத்தரவும் போடவில்லையே! அஷ்ட திக்குப் பர்வதங்கள் நம்முடைய உத்தரவு இன்றியே பிளந்து பிளந்து விழுகின்றனவே. நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்டதொரு சக்தி இருக்கிறது போல் இருக் கிறதே என எண்ணுகிறான். மறுபடியும் ஒன்று நிகழ்கிறது. மேரு குலுங்குதல் உலகத்திற்கே நடுத் துணைப் போலவும், அச்சைப் போல வும் இருக்கிற மேரு மலை குலுங்குகிறது. அது குலுங்கினால் உலகம் முழுதும் குலுங்கும். சூரனது குடல் குலுங்குகிறது. அவன் தன் கண் முன்னாலேயே தனக்குக் கட்டுப்படாத வேறு ஒரு சக்தி இயங்குகிறது என்பதைக் கண்டுவிட்டான். உலகம் எல்லாம் தன் ஆட்டத்திற்கு அடங்கி ஆடிக் கொண்டிருப்பதாக எண்ணியிருந்த அவன் மனம் ஆடுகிறது. "ஏன் இப்படி மலைகள் பிளந்து விழுகின்றன? மேருகிரி ஏன் குலுங்குகிறது?" எனக் கேட்கிறான் சூரன். அறிந்தவர்கள் சொல்கிறார்கள்: "ஒரு குழந்தை தன் கையைத் தட்டிற்று, அந்த ஓசை கேட்டு இப்படி நிகழ்ந்தன என்கிறார்கள். சின்னஞ்சிறு குழந்தை விளையாட்டாகக் கையைத் தட்டும்போதே அஷ்டதிக்குக் குலாசலங்களும் பாதி பாதியாய்ப் பிளந்து விழுகின்றன, மேரு குலுங்குகிறது என்றால், அந்தக் குழந்தை நினைத்து ஒரு காரியத்தைச் செய்தால் என்ன ஆகும் என்று நினைக்கிறான். அப்படி நினைக்கும்போது சூரனது மனமாகிய மலை அசையத் தொடங்குகிறது. பின்னாலே நடக்கப் போகிற யுத்தத்தை நடக்காமல் செய்ய முடியுமா என்ற உள்ளம் ஆண்டவனுக்கு. 26