பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இளைத்துத் தவிக்கின்ற என்னைஎந் நாள்வந்து இரட்சிப்பையே? துறந்தோர் - எல்லாவிதமான இன்ப போகங்களையும் துறந்த வர்கள். உளத்தை - காம நினைவு உடைய மனசை. அதனை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் படையை உடையவர்கள் மங்கையர்கள். பிறர் உள்ளத்தில் காமத்தைக் கொப்புளிக்கும்படியாகச் செய்கின்ற அலங்கார மாதர்கள் இவர்கள். இளைத்துத் தவிக்கின்ற என்னை. - 'அவர்களுக்கு முன்னாலே மனோபலம் இழந்து இளைப் புற்றுத் தவிக்கின்றேன் நான்; உள்ளத் திண்மை எல்லாம் போய்த் தவிக்கின்றேன். என்னை நீ காப்பாற்ற வேண்டும். நான் அந்தப் படையை வென்று தலை நிமிர்ந்து நிற்கும்படியாக அருள வேண்டும்." எந்நாள் வந்து இரட்சிப்பையே? “எத்தனை தவம் உடையவர்களானாலும் அவர்கள் உள்ளத்தில் மகளிரது கண்ணாகிய படை நுழைந்து சிவ காமத்தை ஒழித்து, அவகாமத்தை எழுப்பி விடுகிறதே! அதனால் தவிக்கிறேன்! என்னை எப்போது வந்து பாதுகாப்பாய், அப்பா?' என்று அருணகிரியார் பாடுகிறார். அவர் கருணை ண்டவன் அவரை ரட்சிக்கவில்லையா? அவரை ரட்சித்து விட்டான். பிரபஞ்சச் சேற்றைக் கழியவிட்டு, வெங்காம சமுத்தி ரத்தைக் கடக்க அவருக்குத் திடம் அருளினான். அவனுடைய அருளைப் பெறாமல் நாம் தவிக்கின்றோம் என்கின்ற பெருங் கருணையினால் நாம் சொல்ல வேண்டிய விண்ணப்பத்தை அவர் இப்போது வெளியிடுகிறார். அந்தப் பாட்டில், 'நீ இப்படிச் சொல்ல வேண்டும்' என்று எழுதியிருந்தால், நாம் அதைச் சொல்லும்போது அப்படியே, "நீ இப்படிச் சொல்ல வேண்டும்" என்பதையும் சேர்த்துச் சொல்ல நேரிடும். எது நாம் சொல்ல வேண்டியது, எது நமக்கு அருணகிரியார் கூறும் அறிவுரை என்று வேறுபாடு தெரியாமற் போகும். அதனால், "நீ இப்படிச் சொல்' என்று தனியே நமக்கு ஒரு குறிப்பை வைக்காமல் தம்முடைய 362