பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் வேலும் நிலைக்காகவே பாடுவது போலப் பாடிக் கொடுத்திருக்கிறார் பெருங் கருணை வள்ளல் அருணகிரியார். இந்த வேண்டுகோளை முருகனைப் பார்த்துச் சொல்கிறார். 2 கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி ஊடுருவத் துளைத்துப் புறப்பட்ட வேற்கந்தனே! அஞ்ஞானத்தால் காமம் முதலிய படைகள் அடுத்தடுத்து வந்து தாக்கித் துன்புறுத்துகிறபோது மனிதன் தன் தைரியத்தை விட்டுவிடுவான். அந்தப் படைகளிடமிருந்து தன்னைப் பாது காத்துக் கொள்ள வேண்டுமானால் ஞானம் வேண்டும். அந்த ஞானமே உருவானது வேல். வேலின் துணை இல்லையானால் மகளிரது கூர்மையாகிய கண் படைக்கு அகப்பட்டுப் பதைத்துப் பதைத்து இளைத்துத் தவிக்கின்ற நிலை மாறாது. நச்சுக் கண் 'கண்ணார்க்கு" என்று சொல்லும்போது அருணகிரியார் கற்புடைய மகளிரது கண்களைக் குறிப்பிடவில்லை. முன் பாடல் களிலே சொன்னது போலப் பொது மகளிரைப் பற்றியே நினைந்து இங்கும் கூறுகிறார். கற்புடைய பெண்ணரசிகளை அவர் மிக மிக உயர்வாகச் சொல்வாரே அன்றித் தாழ்வாகச் சொல்ல மாட்டார். கண்ணார்க்கு என்பது கண்ணிலே நஞ்சை உடைய அலங்கார மாதர்களுக்கு என்று பொருள் கொள்வதற்குரியது. அவர்களுடைய பார்வை மென்மையானதுதான். ஆனால் அது வன்மையான உள்ளத்தை உடைக்கும் ஆற்றலுடையது. அந்தக் கண் படையை வெல்வதற்கு உலகத்தில் நாம் பெற்றிருக்கும் இரும்புப் படை எதுவும் பயன் படாது. இரும்பினால் குத்திய புண்ணை மருந்து போட்டு ஆற்றி விடலாம். ஆனால் கண்ணால் குத்தி உண்டான காமப் புண்ணை வேறு எதனாலும் மாற்ற முடியாது. அதற்கு முருகனது வேற் படை வேண்டும். வேல் உருவத்திலே ஆண்டவன் ஞானத்தை வைத்திருக்கிறான். - 363