பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வெள்ளோட்டம் அருணகிரியார் சொல்கிறார்: "அது எனக்குத் தெரியாதா சுவாமி? உலகம் எல்லாம் உன்னைப் போற்றுகின்ற வரலாறு கூடத் தெரியாமல் நான் தமிழ் நாட்டில் வாழ்கிறேன் என்று நினைக்கிறாயா? எப்போதும் உன்னுடைய திருக்கரத்தில் இருக்கும் வேலின் செயல் இன்னது என்பதை எங்களுக்கு உணர்த்த வேண்டி முன்பே ஓர் ஒத்திகை செய்து காட்டியிருக்கிறாயே! சூர சங்காரம் செய்தது அந்த வேல் தானே?’ என்பது போலப் பாடுகிறார். கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி ஊடுருவத் துளைத்துப் புறப்பட்ட வேல். அந்த வேல் முன்பு சூரனைச் சங்காரம் செய்தது. சூரன் மாயை யின் பிள்ளை. பல பல உருவங்களோடு அவன் கிளைத்துப் புறப்பட்டுக்கொண்டே இருந்தான். இறக்க இறக்கத் திரும்பவும் பலவித உருவங்களோடு எழுந்து கொண்டே இருந்தான். அவனுக்குக் கவசமாக இருந்தது கிரெளஞ்ச கிரி. முருகன் விடுத்த வேல் அந்தக் கிரியைத் துளைத்து உள்ளே போய்க் கிளைத்துப் புறப்பட்ட சூரன் மார்பையும் துளைத்து வெளியே புறப்பட்டு வந்துவிட்டது. 'இந்த வரலாறு எனக்குத் தெரியாதா அப்பா? வெறும் வெள்ளோட்டமாக இதைக் காட்டினாய். இதைப்பற்றிக் கந்தப்புராணம் மிக விரிவாகப் பாராட்டிப் பேசுகிறது. இது ஒன்றே உன்னுடைய வேலையாக இருந்திருக்குமானால் சூர சங்காரத்திற்குப் பிறகு வேலைக் கீழே வைத்திருப்பாயே! சூர சங்காரத்தில்தான் உன்னுடைய வேலை ஆரம்பமாயிற்று. அந்த வேலை இன்னும் முடியவில்லையே! கையில் எப்போதும் அந்தச் சக்தி வேலுடன் நிற்கிறாய். அந்த வேலை நினைத்தால் உள்ளத்தில் திரும்பத் திரும்பக் கிளைத்துப் புறப்படுகின்ற காமமாகிய அசுரன், மாயா சக்தியோடு கலந்து எழும் அவகாம மாகிய அசுரன், கிளைத்துக் கிளைத்துப் புறப்பட்ட மாயையின் பிள்ளையாகிய சூரனைப்போல அழிந்து போவான் என்பதைக் காட்ட அல்லவா அன்றைக்கு ஒத்திகை டோல நடத்திக் காட்டி னாய்? அதை மறந்து விடுவேனா? இப்போது, 366