பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணும் வேலும் என்னை எந்நாள்வந்து இரட்சிப்பையே?” என்று பிரார்த்தித்துக் கொள்கிறார். 'இப்பொழுது வா, இன்றைக்கு வா எனக் காலம், நேரம் குறிப்பிட்டு உன்னை நான் வேண்டிக்கொள்ள முடியுமா? என்னைப்போல எத்தனையோ பேர்கள் உன்னுடைய அருளுக்காக அல்லும் பகலும் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. எல்லோர் அகங்களுக்கும் போய்வர வேண்டுமென்றால் உனக்கு நேரம் வேண்டாமா? சாமானிய மனிதர்களே, 'இன்றைக்கு வா, நாளைக்கு வா என்று அழைக்காதீர்கள். நான் பல வேலைகளை உடையவன். செளகரியப்பட்டபோது வருவேன்' என்று சொல்லுகிறார்களே! அவர்கள் எல்லோரையும்விட எப்போதும் சுறுசுறுப்பாக ஒர கணம்கூட ஒய்வில்லாமல் பக்தர்களை ஆட்கொள்ள மயில்வாகனத் தில் ஏறிப் போய்க்கொண்டே இருக்கும் உன்னை, இன்றைக்கு வந்து என்னை இரட்சிப்பாய்!” என்று காலம் குறிப்பிட்டு வேண்ட முடியாது. நான் என்னுடைய விண்ணப்பத்தைப் போட்டு விட்டேன். நீ உனக்குச் செளகரிய்ப்பட்ட காலத்தில், என்னுடைய மனப் பக்குவத்திற்கு ஏற்ப இரட்சிக்க வேண்டும். என்றைக்கு உன் திருவுள்ளம் இரங்கும்?' என்கிறார். ★ கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி ஊடுருவத் துளைத்துப் புறப்பட்ட வேல்கந்த னே!துறந் தோர்உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும்கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னைஎந் நாள்வந்து இரட்சிப்பையே? (பல உருவங்களாகப் பிரிந்து வெளிப்பட்ட சூரபன்மனுடைய மார்போடு கிரெளஞ்சகிரியும் ஒரே சமயத்தில் ஊடுருவும்படியாகத் துளைத்து வெளிப்பட்ட ஞான வேலையுடைய கந்தபிரானே! துறந்த 367