பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வர்களின் உள்ளத்தைத் தம் பக்கலில் வளைத்து அகப்படுத்தி அவர்கள் மிகவும் பதைக்கும்படி வாதனை செய்யும் காமப் பார்வையையுடைய கண்ணைப் பெற்ற மகளிருக்கு வலியிழந்து தவிக்கின்ற அடியேனை நீ என்றைக்கு எழுந்தருளி வந்து பாதுகாப்பாய்? கிளைத்து - மாமரமாகக் கிளைகொண்டு என்றும் பொருள் கூறலாம். மார்பையும் கிரியையும் ஒருங்கே துளைத்தது: 'கிளைபட்டெழுகு ருரமும் கிரியும், துளைபட் டொழியத் தொடுவே லவனே' (கந்தர் அநுபூதி.) இளைத்து - இளைப்புற்று, வலிமையை இழந்து. வேற்கந்தனே என்றது இந்தக் கண்ணால் விளையும் காமத்தைப் போக்கும் ஞான வேலைக் கொண்டவன் என்ற குறிப்பை உடையது.)