பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ. அவர்களுக்கு சிறு வயதிலேயே தமிழ் இலக் கியங் களி மீது பற் று ஏறி பட் டது. டாக்டர் உ.வே. சுவாமிநாதையர் அவர்களுயை தலை மாணாக்கராக இருந்து தமிழ் பயினர் று, அவர்களது அருந்தமிழ் பணிக்கும் துணை நின்று, 'கலைமகள்' மாதப் பத் திரிகையின் ஆசிரியராக ஐம்பதாண்டுகளுக்கு மேல் பணி யாற்றியுள்ளார். தமிழ் ஆராய்ச்சி, இலக்கியம், பக்தி இலக்கியங்கள், கவிதைகள், நாடோடிப் பாடல்கள், பழமொழிகள் என இவரே எழுதியும், தொகுத்தும் அளித் துள்ள நூல்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டனவாகும். குறிப்பாக, இலக்கணத்துக்கு விளக்கம் தருவதில் வல்லவர். சிலேடையாய்ப் பேசுவதில் இவருக்கு நிகர் இவரே. எந்த இலக்கிய நூலிலே சந்தேகம் ஏற்படினும் உடனடியாக விளக்கம் கி.வா.ஜ. அவர்களிடமிருந்து கிடைக்கும் என்பதைத் தமிழ் அறிஞர்கள் பலரும் அறிவர். இவர், பல காலமாக உள்ள ஐயங்களைப் போக்குகின்ற வகையில், 'கலைமகள்'மாத இதழில் பதிலளித்து வந்தார். இவை என்றென்றும் நமக்குப் பயண் விளைக்கக் கூடும்.