பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் கூத்து இவற்றையெல்லாம் கண்டாவது சூரன் திருந்த மாட்டானா என்று நினைக்கிறான். குறும்பு செய்கிற குழந்தையை அடிப்பதற்கு முன்னால் தாய் அதைப் பயமுறுத்தித் திருத்த விரும்புகிறாள். அப்படியும் திருந்தாவிட்டால் அடிக்கிறாள். தேவர் மகிழ்தல் முருகன் சப்பாணி கொட்டிய அதிர்ச்சியில் மேரு மலை குலுங்குகிறது. மேருமலையின் உச்சியிலே வாழ்கின்ற தேவர்கள் முதலில் அஞ்சினார்கள். சூரனிடம் பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உள்ளங்களில் முதலில் பயம் தோன்றுவது தானே இயல்பு? ஆனால் அடுத்த கணமே சண்முக நாதப் பெருமான் கையைத் தட்டியதால் மேரு குலுங்கியது என்று உணர்ந்தவுடன் அவர்களுக்கு முறுவல் உண்டாகிவிட்டது. முன்பு சூரனிடம் நடுங்கி நடுங்கி அச்சம் கொண்டார்கள்; இப்பொழுதோ முதலில் நடுங்கிப் பின்பு உவகை கொண்டார்கள். ஆறு குழந்தைகளாக அவதாரம் செய்த எம்பெருமான் பரா சக்தியின் அணைப்பினாலே ஆறுமுகமும், பன்னிரு திருக்கரங் களும் உடைய சண்முகநாதனாக மாறி வந்திருக்கிறான்; போர் செய்து சூரனைத் தொலைக்க வந்திருக்கிறான். அவன் தன் கையைத் தட்டி, "நான் இருக்கிறேன். உங்களைக் காப்பாற்று கிறேன்' என அபயம் அளிக்கிறான் என்று நினைக்கும்போது தேவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. சப்பாணி கொட்டிய சண்முகநாதன் சூரன் உள்ளத்தில் பயத்தை உண்டாக்கி, தேவர்களது மனத்தில் அபயத்தை உண்டாக்கினான். - விண்ணாரும் உய்ய. தேவர்கள் எல்லாம் உய்வு பெறும்படியாகச் சப்பாணி கொட்டினான். தேவர்கள் சூர சங்காரம் ஆனால்தானே உய்வு பெறுவார்கள்? சப்பாணி கொட்டிய மாத்திரத்தில் எப்படி உய்வு பெற்றார்கள்?' என்றால், எந்தக் காரியத்தையும் ஆண்டவன் தொடங்கிவிட்டால் போதும், அது நிச்சயமாக வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும். அற்ப சக்தி உடைய மனிதர்கள் ஒரு காரியத்தை நினைந்து ஆரம்பித்தால் அது முற்றுப் பெறாமல் போகலாம். ஆனால் எம்பெருமானுடைய சக்தி அளவிடற் 27