பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கரியது. தொடங்கினால் போதும்; நிச்சயம் வெற்றி பெறுவான். இந்த உண்மை தெரிந்த தேவர்களுக்கு, அஞ்சாதீர்கள் எனச் சொல்கின்ற குறிப்புப் போலக் கையைத் தட்டினான். கைஆ றிரண்டுடைச் சண்முகனே. ஆறுமுகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் உடைய சண்முக நாதனாக இருப்பவன் தட்டினான்; பன்னிரண்டு திருக்கரங் களாலும் சப்பாணி கொட்டினான். 'பன்னிரண்டு திருக்கரங்களும், ஆறுமுகமும் உடைய சண்முக நாதப் பெருமானே, நீ சப்பாணி கொட்டித் தேவர்கள் உய்யும்படி யாகவும், சூரன் முதலிய ஐந்து அசுரத் தலைவர்களின் மனமாகிய மலைகள் எல்லாம் நடுங்கிப் பிளந்து குலுங்கும்படியாகவும் செய்தவன் அல்லவா? நான் என்ன செய்வேன் என் உடம்பாகிய வீட்டில் ஐந்து பகைவர்கள் எப்போதும் கூத்தாடிக் கொண்டே இருக்கிறார்கள். நெஞ்சம் கணம்கூட உன்னை நினைக்காமல் சுழன்று கொண்டே இருக்கும்படி செய்கிறார்கள். இந்தப் பகைவர் களை அடக்கி, எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிற என்னுடைய பாச நெஞ்சை, உன் திருவடியைப் பற்றிக் கொண்டு கொஞ்ச நேரமாவது சுழலாமல் நிலைத்திருக்கும்படி காப்பாற்றக் கூடாதா? இந்த வாழ்க்கைக் கூத்துக்கு ஒரு முடிவு கட்ட மாட்டாயா?" என்று வேண்டிக் கொள்கிறார் அருணகிரியார். குப்பாச வாழ்க்கையுள் கூத்தாடும் ஐவரில் கொட்புஅடைந்த இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாய்;இரு நான்குவெற்பும் அப்பாதி யாய்விழ மேரும் குலுங்கவிண் ணாரும்உய்யச் சப்பாணி கொட்டிய கைஆ றிரண்டுடைச் சண்முகனே! மேருவும் மலைகளும் இந்தப் பாட்டையும் சேர்த்து நான்கு பாட்டுக்களில் மேரு மலையும், எட்டுத் திக்கிலுள்ள குன்றுகளும் குலுங்குவதைப் பார்த்தோம். முதல் பாட்டில் முருகப் பெருமானது வாகனமாகிய 28