பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றடி பட்ட இடம் அருணகிரிநாதப் பெருமான் முருகன் என்னும் குழந்தையை நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டிக் கொண்டு வருகிறார். குறிஞ்சிக் கிழவன் என்று பெயர் சொன்னாலும், குருத்தைப் போலப் பச்சிளம் குழந்தையாகத் தொட்டிலில் படுத்து விளை யாடிப் பாலுக்காக அழுவதைச் சொன்னார். பின்பு அவனது இடையில் கட்டிய கிண்கிணியில் ஒலி எப்படி எதிரொலியை எழுப்பியது என்று சொன்னார். அதற்குப் பிறகு முருகன் தவழ்ந்து உட்கார்ந்து கையைச் சேர்த்துச் சப்பாணி கொட்டியதைக் கூறினார். அதன் பின்பு முருகக் குழந்தை நடக்கத் தொடங்கி யிருக்கிறான். அக்குழந்தை அடி எடுத்து வைக்கும்போது என்ன விளைந்தன என்று அவர் சொல்கிறார். கலைஞர் வழக்கம் அருணகிரிநாதர் கவிஞராதலின், ஒரு கருத்தைச் சொல்ல வரும்போது அதை மாத்திரம் நேர்முகமாகச் சொல்லாமல், சுற்றிச் சூழ இருக்கிற விஷயங்களையும் சொல்லி அழகுபட விளக்குவார். ஒன்றைச் சொல்லுகையில் அதற்கு நிலைக்களனாகத் தொடர் புடைய வேறு பலவற்றைச் சொன்னால் அழகாக இருக்கும். பொன்னாலான கட்டித்திற்குள் வைரத்தை வைத்துக் கட்டினால் அழகு மிகுதியாகும். அஸ்திவாரம், விதானம், தூண் முதலியவை யாவும் விரிவாக வைத்து அமைத்துக் கோயிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்கிறார்கள். இது கலைஞர்களின் வழக்கம். அந்த வகையில் எம்பெருமான் அடி எடுத்து வைத்தான் என்று சொல்ல வரும்போது அவனுக்கு முன்னாலே அடி எடுத்து வைத்த பெருமானை நினைக்கிறார்; முருகனுடைய மாமாவை நினைக்கிறார். தம்முடைய பெரிய திருவடியால் அவர் மூன்றடி வைத்து அளந்தார். அவருடைய மருமகனாகிய முருகப் பெருமானும்