பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அவனிடம் இருக்கும். இத்தகையவன் மகாபலி. வாமன உருவத்தில் திருமால் வந்திருக்கிறார் என்று தெரிந்து கொள்ளவில்லை. அவர் கேட்ட மூன்றடி மண் தருகிறேன் என்று சொல்லிவிட்டான். சுக்கிராசாரியார் செய்கை ஆனால் அவனுடைய குரு சுக்கிராசாரியாருக்கு வாமனராக வந்தவர் யார் என்று தெரியும். அவர் ஞானம் உடையவர். 'மகா பலியே, வாமனராக வந்திருப்பவர் யார் என்று தெரியாமல், கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாயே. முடியாது என்று சொல்லிவிடு' என அவனைத் தடுத்தார். "நான் சொன்ன வாக்கை மீறமாட்டேன்' என்று சொல்லி விட்டான் மகாபலி. அப்பொழுதுங்கூடச் சுக்கிராசாரியாருக்கு மனம் வரவில்லை. அவன் தண்ணிர் வார்க்க எடுத்த கிண்டியின் வாயில் ஒரு சிறு வண்டைப்போல நுழைந்து கொண்டு, தண்ணீர் கீழே விழாமல் தடுத்தார். வாமனர் தம் கையில் வைத்திருந்த தர்ப்பையை எடுத்து அதன் துவாரத்தின் வழியே குத்தினார். அதனால் சுக்கிராசாரியார் ஒரு கண்ணை இழந்தார். நல்ல ஞானம் படைத்த சுக்கிராசாரியாருக்கு அசுரனாகிய மகாபலியைத் திருத்து கிற ஆற்றல் இல்லை. மகாபலியின் அசுரத் தன்மை அவருக்கு வந்துவிட்டது. நல்லவர்களிலும் சிலர் சேர்க்கையினால் இப்படித் தான் கெட்டுப் போவார்கள் என்பதற்கு அவர் ஒரு சான்று. சில நல்லவர்கள் எங்கே இருந்தாலும் அந்த இடத்தில் தாம் கெட்டுப் போகாமல் இருப்பார்கள். இது அவர்களின் மனத்தின்மையைப் பொறுத்தது.' ஒருவன் மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுக்கும்போது அதைக் கொடுக்காதே என்று தடுக்கக் கூடாது என்பது நல்ல ஞானம் வாய்ந்த சுக்கிராசாரியாருக்குத் தெரியவில்லை. நாம் சில சமயங்களில், "அவன் எனக்குக் கொடுக்கிறேன் என்றதை இந்தப் பாவி கொடுக்காமல் செய்துவிட்டானே! இவனும் இவனைச் சேர்ந்தவர்களும் வாழ்வார்களா? சோற்றுக்கும் துணிக்குமின்றி இவன் நாசமாகப் போகமாட்டானா?" என்று சொல்வது உண்டு. அதையே அழுத்தந் திருத்தமாக வள்ளுவர் அழகான தமிழில் மிக நாகரிகமாகச் சொல்கிறார். 34