பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றடி பட்ட இடம் "கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம் உண்பது உம் இன்றிக் கெடும்.” சுக்கிராசாரியார் இந்தப் பாவத்தைச் செய்தார். வாமனர் ஒரே அடியாகச் சுக்கிராசாரியாரை மாய்த்து இருக்கலாம். பெருமாளுடைய நோக்கம் அது அல்ல. சுக்கிரசாரியாருக்கு அறிவு போதாது; இரண்டு கண்ணும் இருக்கும் மனிதனுக்கு இருக்க வேண்டிய அறிவு விரிவு அசுரகுருவுக்கு இல்லை. ஆகையால் ஒரு கண்ணைக் குத்தி விட்டார். மகாபலி நீர் வார்த்து, மூன்றடி மண் தந்தேன்' என்று சொன்னான். உடனே வாமனருடைய திருவுருவம் பெரிதாகி விட்டது. விசுவரூபத்தை ஏற்றுக் கொண்டவுடன் தம்முடைய ஒர் அடியாலே பூவுலகத்தை அளந்தார். மற்றோர் அடியாலே வானுலகத்தை அளந்தார். மூன்றாவது அடியால் அளக்க ஒன்றும் இல்லை. 'நீ வாக்களித்தபடி மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?' என்று கேட்டார். அப்போது மகாபலி தன் தலையைக் காட்டினான். 'உன் திருவடியை என் தலையில் வைத்து அளந்து கொள்' என்றான். திருமால் அவன் தலையின் மேலே தம்முடைய திருவடியை எடுத்து வைத்தார். இறைவரது திருவடி சம்பந்தம் கிடைத்த மாத்திரத்திலே அவனுக்குப் புகழ் உண்டாகி விட்டது. 'எம்பெருமானே, இன்றைக்குத்தான் என் அகத்தில் நீங்கள் விளக்கு ஏற்றி வைத்தீர்கள். இன்றைத் தினத்தில் உலகிலுள்ள மக்கள் தங்கள் அகங்களில் விளக்கு ஏற்றி வைத்துக் கும்பிடட்டும், என் நினைவாக என்றான். மகாபலிச் சக்ரவர்த்தி நல்ல ஞானம் பெற்று உய்யுமாறு பெருமாள் அவன் தலையில் திருவடி வைத்த நாளைத்தான் நம் நாட்டில் இன்றைக்கும் கார்த்திகைத் திருவிழாவாகத் தீபங்கள் ஏற்றி வைத்துக் கொண்டாடுகிறோம். 'மனிதன் யார்? அவன் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள வழி என்ன? அதைக் காப்பாற்றித் தருகின்ற நாயகன் யார்?" என்பவற்றைப் போதிக்கின்ற வேதாந்த சித்தாந்த தத்துவங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் கொண்டாடுகின்ற திருநாட்கள். மகாபலியின் அகத்தில் விளக்கு ஏற்றப்பட்ட நாள் எல்லா மக்களின் அகத்திலும் விளக்கு ஏற்றி வைக்கப்படும் 35