பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கார்த்திகை நாளாக இருக்கிறது; இந்தக் கதையை நினைவு படுத்துகிறார் அருணகிரியார். படி மாவலிபால் மூவடி கேட்டுஅன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மாவலிபால் படி மூவடி கேட்டார். படி என்பது நிலம். பிறகு பழையதாகிய இந்த அண்டத்தின் உச்சியிலே முட்டும்படியாத் தம் சிவந்த அடியை நீட்டிய பெருமான் திருமால். 2 பேரடியும் சிற்றடியும் சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே அப்படிச் சேவடியை நீட்டிய பெருமானுக்கு மருகன், தங்கை பிள்ளை, முருகன். மாமாவாகிய திருமாலின் அடி பெரிய அடி; உலகத்தை எல்லாம் அளந்த பேரடி அந்தப் பேரடியை உடையவர் மருகன் முருகக் குழந்தை. அவனுடைய திருவடி சிறிய அடி. மாமாவின் பேரடி மூன்று பொருளை அளந்தது. மருகனின் சிற்றடியும் மூன்று பொருளை அளந்தது. பூவுலகம், வானுலகம், மாவலியின் தலை ஆகிய மூன்றையும் அளந்தது அந்தப் பேரடி. இந்தச் சிற்றடி எந்த மூன்று பொருள்களை அளந்தது? தாவடி ஓட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்,என் பாஅடி ஏட்டிலும் பட்டதன்றோ? மயிலின்மேல் முருகனுடைய சிற்றடி மயில் மேலே பட்டது. மோட்டார் கார் வைத்திருந்தவர்கள் யாவருக்கும் யுத்த காலத்தில் பெட்ரோலுக்கு லைசென்சு எளிதில் கொடுக்கவில்லை. ஆனால் பெட்ரோல் மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய சிலபேர் இருந்தார்கள். அவர்கள்தாம் டாக்டர்கள். அவர்களுக்குப் பெட்ரோல் எளிதாகக் கிடைக்கும் 33