பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றடி பட்ட இடம் படி லைசென்சு கொடுக்காவிட்டால் யாருக்குத் துன்பம்? நோய்ப் பட்டிருக்கிற உயிர்களின் நோயைப் போக்குபவர்கள் டாக்டர்கள். சமுதாயத்தில் மிகச் சிறந்த தொண்டைச் செய்பவர்கள். அவர் களுக்குக் கார் எதற்கு என்றா கேட்பது? டாக்டர் ரங்காச்சாரியார் வைத்தியத் துறையில் மிகப் புகழ் வாய்ந்தவர். எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றியிருக்கிற புண்ணியவான் அவர். அவர் மிகப் பெரிய ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருந்தார். யாரோ ஒருவர் அவரை, "இவ்வளவு அதிக விலை உடைய கார் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டாராம். டாக்டர் அதற்குப் பதிலாக அவரைப் பார்த்து, "நீங்கள் இரண்டு மூன்று லட்சம் செலவு செய்து எதற்காக வீடு கட்டினர்கள்?" என்று கேட்டார். "நான் வாழ்கின்ற வீடு அல்லவா? அதற்காகத் தான் மிக்க வசதியுள்ள்தாக அதிகப் பொருள் செலவு செய்து கட்டினேன்' என்றாராம் கேட்டவர். 'நானும் ஒரு நாளைக்குப் பல மணி நேரம் காரில் வசிப்பதனால் தான் இதை வைத்திருக் கிறேன்' என்று சொன்னாராம். அதைப்போல மயில் வாகனம் வைத்துக் கொண்டிருக்கிற பெருமான் அதைப் பெருமைக்காக வைத்துக் கொள்ளவில்லை. கோயிலில் வைத்துக் கும்பிடுவதற்காகவும் அல்ல. அடியார்கள் அழைப்பதற்கு முன்னே ஒடிச் சென்று அருள் செய்வதற்காக வைத்திருக்கிறான். 'நீலம்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண் டதனாலே மால்கொண்ட பேதை' என்று ஒரு திருப்புகழ் வருகிறது. "ஆண்டவனே, நான் நீ இருக்கிற இடத்திற்கு வந்து உன்னை எவ்வாறு வேண்டி அருள்பெறப் போகிறேன்' என ஏங்கினாள் ஒரு பெண். முருகன் மயில் வாகனத்தில் வந்து அன்பர்களின் வீட்டு வாசலில் இறங்கினான். தேவலோகத்தில் இருப்பவன் பூலோகத்திலுள்ள சிற்றுயிர்களுக்கு அருள் செய்வதற்காகவே மிக வேகமாக ஓடி வரும் மயிலை வாகனமாக வைத்திருக்கிறான். ஆகவே அவன் மேல் காதல் கொண்டால் அது நிறைவேறும் என்று அந்தப் பெண்ணுக்குத் தைரியமும் நம்பிக்கையும் வந்தனவாம். 37