பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 எம்பெருமான் மயில் வாகனத்தின்மேல் எப்பொழுது ஏறு கிறான்? தன்னை நினைந்து உருகுகின்ற பக்குவத்தை அடைந் திருக்கும் அடியார்களை அந்தக் கணமே ஆட்கொள்வதற்காகப் பாய்ந்து ஒடும்போது அதை அனைத்துக் கொண்டு ஏறுவான். அவனது கால் மயிலின்மீது படுவதே அடியார்களுக்கு அருள் செய்வதற்காகத்தான். அதன்மீது அவன் ஒரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மற்றொரு காலைத் தூக்குகிறான். அவன் அமர்ந்த மாத்திரத்திலே நாலுகால் பாய்ச்சலில் குதிரை செல்வது போல அந்த மயில் தாவி ஓடுகிறது. அவன் விரைவாகவே ஏறு கிறான். அவன் சரியாக அமர்வதற்கு முன்னே மயில் விரைந்து செல்லத் தொடங்குகிறது. முருகன் மயில் வாகனத்தின் மேல் பொருந்திச் சுகமாக அமர்ந்திருக்கவில்லை. அன்பர்களிடம் சென்று உதவ வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறான். இதை நினைந்தே, 'சுப்பிரமணியசுவாமி மயில் வாகனத்தில் இருக்கிறமாதிரி' என்ற பழமொழி வந்தது. அதற்கு வேறு வகையாகப் பொருள் சொல் வார்கள். அது தவறு. தாவடி ஒட்டும் மயிலிலும். தாவுகின்ற அடியை உடையது மயில். தாவித் தாவி ஒடு கின்ற அந்த மயிலின் மேல் முருகன் தன் சிற்றடியை வைத்தான், எதற்காக? அடியார்களுக்கு அருள் செய்வதற்காக. தேவர் தலை மேல் தேவர் தலையிலும் எம்பெருமான் அடி சிற்றடியானாலும் அதன் பெருமை சொல்லி முடியாது. 'ஒரு பறவையின் மேலேதானே அந்தத் திருவடி பட்டது?" எனக் குறைவாக நினைக்கக் கூடாது. முப்பத்து முக்கோடி தேவர்கள் தாம் தாம் உயர்ந்தவர்கள் என்று எண்ணி இறுமாந்து தலை நிமிர்ந்து நடந்தார்கள். அவர்கள் தலை வணங்கி அறியாதவர்கள். தம்மைக் காட்டிலும் வேறு ஒரு தலைவன் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைவனாகிய இந்திரன் தலை நிமிரிந்து செருக் கோடிருந்தான். ஆண்டவன் அவர்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டு மென்று நினைத்தான். சூரன் என்ற அசுரன் வந்தான். அப்பொழுது 35