பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றடி பட்ட இடம் தான் இந்திராதி தேவர்களுக்கு, தங்களினும் மேம்பட்ட ஆற்ற லுடையவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. சூரன் தன்னுடைய அசுரத் தன்மையைக் காட்டித் தேவர்களை அல்லலுற வைத்தான். இந்திரனது வீரம் அவனை அடக்கப் பயன்பட வில்லை. அவனது வச்சிராயுதமும் பயன்படவில்லை. அவன் தேவலோகத்தையே இழந்தான். அப்பொழுதுதான் இந்திரன் முதலிய தேவர்களுக்கு ஆண்டவன் நினைவு வந்தது. சிவபெருமானிடத்தில் ஒடிப் போய், 'எம் பெருமானே, சூரன் செய்கிற கொடுமைகள் எல்லை யில்லாதன; அவனை அடக்க மிக்க வீரம் செறிந்த ஒரு குழந்தையைத் தர வேண்டும்' என்று வேண்டினர். அப்பொழுது முருகன் அவதாரம் செய்தான். முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு வாழ்வளிக்க முருகன் என்னும் குழந்தை அவதாரம் செய்திருக்கிறான் என்றால், அவர்களெல்லாம் அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடாமல் என்ன செய்வார்கள்? அக்குழந்தையின் சிறிய திருவடிகள் தேவர் தலைகளின்மேல் பட்டன. 'முருகனே, உன்னுடைய சின்னஞ்சிறு திருவடியை எங்கள் தலையிலே வை அப்பா' எனச் சொல்லித் தேவர்கள் தலையைக் காட்டி வணங் கினர். முன்பு தலை நிமிர்ந்து நின்றவர்கள் முருகப் பெருமானுக்கு முன் தலை வணங்கினார்கள். அவர்கள் தலைகளில் எல்லாம் அந்தக் குழந்தையின் சிற்றடி பட்டது. 3 பழமும் விதையும் தாவடி ஒட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்,என் பாஅடி ஏட்டிலும் பட்டதன்றோ? இந்தப் பாட்டை அருணகிரியார் சொல்வதற்கு முக்கியமான காரணம் இரண்டாவது அடியில் இருக்கிறது. நல்ல பழத்தில் மேலே தோல் இருக்கும். அப்புறம் கதுப்பு, சுளை, நடுவிலே விதை இருக்கும். இந்தப் பாட்டிலும் விதைபோல அவருடைய சொந்த அநுபவம் இரண்டாவது அடியில் இருக்கிறது. அதை க.சொ.11-4 39