பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றடி பட்ட இடம் பிள்ளையார் சுழி போட்டாற்போல, என் பாடி அடி ஏட்டிலே முருகப் பெருமானுடைய சிறிய திருவடிகள் அல்லவாபட்டிருக் கின்றன? என் பாட்டின் அடி ஏட்டிலே முதல் முதலில் அவன் தன் திருப்பாதங்களை வைத்தான். அந்த ஏட்டைத் தன் திருவடி களால் தொட்டுவிட்டு, அப்புறம் அவன் அல்லவா எல்லா வற்றையும் காலால் எழுதினான்?" என்பது போலச் சொல்கிறார். என் ாபா அடி ஏட்டிலும் பட்ட தன்றோ? "தாவி ஒடுகின்ற மயிலின் மேலே பட்ட திருவடி, தேவர் களுடைய தலையில் பட்ட திருவடி, என்னுடைய கவிதையின் அடி ஏட்டிலும் பட்டதன்றோ? மயிலைப் போல மெத்தென்று இருப்பது அல்ல என் ஏடு. அல்லது தேவர்களுடைய முடியைப் போல ரத்தின கசிதமான வேலைப்பாடு அமைந்த மகுடங்கள் நிரம்பியதும் அல்ல. வேறு சிறப்பு எதுவும் இல்லாதது. அப்படி இருந்தும் அந்தப் பெருமானுடைய சிற்றடி என் பா அடி ஏட்டிலும் பட்டது. அவன் கருணை அது. அவன் திருவடி பட்ட மாத்திரத்திலே இக்கவிதைகள் உயர்வு பெறாமல் எப்படி இருக்கும்?' என்று சொல்வது போலச் சொல்கிறார். அருணகிரியார் பெரிய புலவர். அவர் சந்தம், எதுகை மோனை முதலியவை பார்த்து, வார்த்தைகளைச் சேர்த்துக் கவிதை எழுதுபவர் அல்ல; கவிதை பாடுகிறவர். 'என் பா அடி ஏட்டிலும் பட்டதன்றோ எனச் சொல்லி யிருக்கிறாரே, ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியிருக் கிறாரே, எந்தச் சுவடியின் அடி ஏட்டில் அந்தப் பெருமானுடைய சிற்றடி பட்டது?' என்று கேட்கலாம். அருணகிரியாரைப் போன்று பெரும் புலவர்கள் ஏடு எழுத்தாணி எடுத்து வைத்துக் கொண்டு பாட்டுக்கள் எழுது பவர்கள் அல்ல. அவருக்கு ஏடு எது? நாக்குதான். நாவிலிருந்து வெள்ளம் வெள்ளமாகக் கவிதை பெருகும். அவ்வாறு பாட்டு வரவேண்டுமென்றால் அது இருதயத்திலிருந்து கிளம்ப வேண்டும். உள்ளே நினைத்தால்தான் வாக்கிலே வரும். நாம் பேசுகின்ற பேச்சு எல்லாம் முதலிலே மனத்துள் உருவாகிறது. அது வெடித்து எழுந்து வந்து நாக்கிலே குதிக்கிறது. பேசுகிறோம். 41