பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றடி பட்ட இடம் பேச முடிகிறதா? இல்லை. ஏன்? பேச்சு என்ற ஒன்று உள்ளே எழுந்தால்தான் வெளியே வரும். உள்ளே உள்ள நாக்குப் பேச வில்லை என்றால் வெளியே உள்ள நாக்கும் பேசுவது இல்லை. உள்ளே இருக்கிற நாக்கும் தானாகப் பேசாது. அதற்கு உரை சொல்லிக் கொடுக்கிறவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் ஆண்டவன். முதலிலே பேசுகிறவன் ஆண்டவன். அதற்கு அப்புறம் உள்ளேயுள்ள நாக்கு, மன நாக்கு, பேசுகிறது. அதற்கப்புறந்தான் வெளி நாக்குப் பேசுகிறது. ஆண்டவனே ஒவ்வொருவருடைய நாக்கும் இயங்க மூலமாக இருக்கிறான். இதையே அப்பர், 'உள்நின்ற நாவுக்கு உரையாடியாம்' என்று பாடினார். உள்ளமே அடி ஏடு பாட்டுக்களை வெள்ளம் வெள்ளமாகப் பொழிந்த அருணகிரி நாத சுவாமிகள் என்ன சொல்கிறார்: "நானா அவற்றைப் பாடு கிறேன்? எம்பெருமான் முருகனது சிற்றடி என்பா அடி ஏட்டிலும் பட்டது' என்கிறார். பாட்டுக்கு அடி ஏடு எது? மேல் ஏடு எது? மேல் ஏடுதான் வெளியிலுள்ள நாக்கு. அடி ஏடு உள்ளம். உள்ளத்தில் தோன்றியது நாவில் வருகின்றது. ‘எம்பெருமான் முருகனது சிற்றடி என் மனத்திலே பட்டது. அதனால் அல்லவா வெள்ளம் வெள்ளமாகப் பாட்டு வருகிறது?’’ என்கிறார். 'உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண் டாகும்" எனப் பாரதியார் பாடுகின்றார். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டா வதற்குக் காரணம் ஆண்டவன் அங்கே வீற்றிருப்பதுதான். ஆண்ட வனது அடி அந்த அடி ஏட்டில் பட்டால்தான் ஒளி உண்டாகும். பிறகு அந்த உண்மை ஒளி வாக்கினிலும் உண்டாகும். 'கவிதை பிறக்கின்ற என் உள்ளமாகிய அடி ஏட்டில் இறைவனது சிற்றடி பட்டது' எனச் சொல்கிறார் அருணகிரியார். பட்டது என்று செருக் கோடு அவர் பேசவில்லை. "பட்டது அல்லவா? எனக் கேட்கிறார் நயமாக. அவன் கருணையை நினைந்து அப்படிக் கேட்கிறார். "நான் கவிதை எழுதுகிற புத்தகத்தின் மேல் ஏடு நாக்கு. அடி ஏடு உள்ளம். அதன்மேல் ஆண்டவன் திருவடி வைத்தான். திரு 43