பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அது அவருக்கு விளங்கவில்லை. ஆனால் நம்மை வைகிறான் என்பதை மாத்திரம் உணர்ந்தார். திரும்ப வைய ஆரம்பித்தால் தான் அவன் போவான் எனவும் எண்ணினார். ஆனால் எப்படி வைவது? அவருக்கு வசைத்தமிழ் தெரியாது. வாழைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கத்திரிக்காய்' என்று காய்களின் பெயராகவே அடுக்கிக் கொண்டு போனார். அப்படிச் சொல்லும் போது வார்த்தைகளைக் கடுமையாகச் சொன்னார். அந்தத் தொனியைக் கேட்டு அவர் தன்னை வைகிறார் என எண்ணி அந்த வெள்ளைக்காரன் போய்விட்டான். வைய வேண்டுமென் றாலும் கனிந்த உள்ளங்களிலே வசவு தோன்றுவதில்லை. ஈர உள்ளம் அன்பு நீரினால் நனைந்து ஈரமாகிய உள்ளங்களில் ஆண்டவனது சிற்றடிகள் பதிகின்றன. "என்னுடைய உள்ளத்தில் ஆண்டவனுடைய சிற்றடிகள் பதிந்தன என்று அருணகிரியார் அகங்காரத்தோடு சொல்லவில்லை. மயில்மேல் பட்ட பாதம், தேவர் தலையில் பட்ட மலரடி இந்த ஏழையின் ஏட்டிலும் பட்டது என்று பணிவாகவே சொல்கிறார். அகங்காரம் அறவே அற்றுப்போன உள்ளங்களில்தானே அவன் சிற்றடி படுகின்றது? இருதயத்திலே பதிந்து அவன் திருப்பாதம் மணக்கிறது. இருதயத்திலிருந்து வெளிப்படும் பாட்டிலும் அந்த அடியின் மணம் வீசுகிறது. 'முருகன் அடி என் பாவின் அடி ஏட்டிலே பட்டது என்று தம் அநுபவத்தையும் நன்றியறிவையும் சொல்ல வந்தவர், இறைவன் செய்த அந்த உபகாரத்தின் பெருமையை எடுத்துக் காட்ட அந்தச் சிற்றடி செய்த பிற செயல்களையும் உடன் கூறினார். தாவடி ஒட்டும் மயிலிலும் தேவர் தலையிலும்என் பாஅடி ஏட்டிலும் பட்டதன் றோ,படி மாவலிபால் மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச் - சேவடி நீட்டும் பெருமான் மருகன்தன் சிற்றடியே? 48