பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றடி பட்ட இடம் (தாவிப் பாய்ச்சலாக ஓடச் செய்யும் மயிலின் மேலும், தேவர்களின் தலையின்மேலும், என்னுடைய பாக்கள் எழுதிய சுவடியின் அடி ஏட்டிலும் பட்டது அல்லவா, அன்று மாவலியினிடம் மூன்று அடி மண் கேட்டுப் பழைய அண்ட கூடத்தின் உச்சி முட்டும்படியாகத் தன் சிவந்த அடியை நீட்டும் பெருமானாகிய திருமாலின் மருகனுடைய சிற்றடி? தாவடி ஒடுதல் - தாவிச் செல்லுதல். வீரர்கள் நடப்பதைத் தாவடி செல்லுதல் என்பர். பா எழுதிய அடி ஏடு. படி-பூமி. முது அண்ட கூடம். முட்டை போன்ற வடிவை உடைமையால் பிரபஞ்சத்துக்கு அண்டம் என்ற பெயர் வந்தது. முகடு - உச்சி. சிற்றடி பட்டதன்றோ?) 47