பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் சொல்லும் வகை கந்தர் அலங்காரத்தில் அருணகிரியார் வெவ்வேறு வகையாகக் கருத்துக்களை எடுத்துச் சொல்கிறார். முதல் பாட்டிலே வந்தது போல், "பேற்றைத் தவம்சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா!' என்று தம்முடைய சொந்த அநுபவ நிலையில் நின்று சொல்கிறது ஒரு வகை. முருகனைச் சார்ந்திருக்கிற வேல், சேவல், மயில், கிண்கிணி இவற்றின் ஆற்றலை உணர்த்துவதன் வாயிலாக அவன் பெருமையை உணரவைப்பது ஒரு வகை. "அழித்துப் பிறக்கஒட்டாஅயில் வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீர்” என்பது போல நாம் செய்யாத காரியத்தைச் சொல்வது மற்றொரு ü ] ☾YᏜ . இப்பொழுது வேறு ஒரு வகையாகப் பாடுகிறார். இன்னது செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வருகிறார். மற்றவர் களுக்கு அறிவுரை கூற வருகிறவர்கள், தாம் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் அப்படிச் செய்யலாம். உயர்ந்தநிலையில் இருக்கிறவர்களிலும் இரண்டு வகையினர் உண்டு. தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதாக எண்ணிக் கொண்டு, மற்றவர்கள் கீழான நிலையில் இருப்பதுபோல் எண்ணி, உபதேசம் செய்ய வருவார்கள் சிலர். தாங்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நினைக்காதவர்கள் சிலர். அவர்கள் பின்னும் உயர்ந்த நிலைக்கு ஏறிவிடுகிறார்கள். செருக்கு எந்த நிலையிலும் வந்து விடும். செருக்குக் கூடாதென்று பிறருக்குச் சொல்லச் சொல்ல