பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 காரியங்களைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போதே இறைவன் திருவருள் வந்து வாய்க்குமா? இந்தக் கேள்வியைக் கேட்டவர் நம்முடைய பிரதிநிதியாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் நாமும் அப்படித்தான் கேட்போம். தினந்தோறும் உண்ணுகின்ற உணவில், அணிகின்ற ஆடையில், நுகர்கின்ற உலகியல் இன்பத்தில் சிறிதும் குறைவுபடாமல் இருக்கும்போதே, இறைவன் திருவருள் கிடைக்க வேண்டுமென்ற ஆசை உலகத்திலுள்ள எல்லா மக்களிடத்திலும் இருக்கிறது. தவநெறியில் செல்ல வேண்டுமானால் இப்பொழுது நுகரும் இன்பங்களைக் கைவிட வேண்டும். இறைவனது திருவருள் பெற்று விட்டால் அழிவே இல்லாத, எல்லையே இல்லாத பேரின்பம் சித்திக்கும் என்று சொல்லுகிறார்கள். அது கிடைக்கிறது என்பது என்ன நிச்சயம்? இப்பொழுது நாம் அடைகின்ற உலக இன்பம் கையின் மேல் இருக்கிறது. பேரின்பம் கிடைப்பது உண்மையாக இருந்தால் கையில் கிடைப்பதை விட்டு விடலாம். அது கிடைப் பது உண்மையோ, பொய்யோ நமக்குத் தெரியாது. "இப்பொழுது கிடைப்பதை விட்டுவிடாமல் இதையும் அநுபவித்துக் கொண்டே இருக்கிறோம்; அந்தப் பேரின்பம் உண்மையானால் அதைப் பெறவும் ஆயத்தமாகய் இருக்கிறோம். இந்த இன்பத்தைச் சிறிதளவும் விடாமல், அதைப் பெறுவதற்கு வழி ஏதேனும் உண்டா?" இதுதான் நம் கேள்வி. இப்படிக் கேட்பவர் கூட்டத்தைப் பார்த்து ஒருவர், "உனக்கும் வழி உண்டு' என்று சொன்னால், அவரைவிடக் கருணை உடையவர் யாராவது இருக்க முடியுமா? 'நீ பட்டினி கிடக்க வேண்டாம். சாஸ்திரங்கள் படித்திருக்க வேண்டாம். தலங்களுக்கு யாத்திரை செய்திருக்க வேண்டாம். தத்துவ விசாரம் செய்திருக்க வேண்டாம். அவற்றில் ஒன்றும் இல்லையே என்ற கவலை வேண்டாம். கொஞ்ச நேரமாவது மெளனமாக இருக்க எனக்குத் தெரியாதே என்றுகூடக் கவலைப்பட வேண்டியதில்லை. நீ இப் பொழுது இருக்கிறபடியே இரு இறைவன் அருள் தானே உனக்கு வந்து வெளிப்படும்" என்று அருணகிரியார் சொல்கிறார். கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே. 'ஆண்டவனுடைய திருவருள் எங்கே, எப்படிக் கிடைக்கும் என்று அதை நீங்களே தேடிச் செல்ல வேண்டாம். நீங்கள் எப்படி 50