பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள். தானாக அவன் அருள் வந்து கிடைக்கும்' என்று அவர் சொல்கிறார். 'இது மிகவும் நல்ல உபதேசமாக இருக்கிறதே! இன்றைக்கு நாம் செய்து கொண்டிருக்கிற காரியங்களை எல்லாம் இப்படியே செய்து கொண்டு, இருந்தபடி இருந்தால் போதுமே! இவர் சொல்கிறபடி அருள் தானாக வந்து வெளிப்பட்டுவிட்டால் மிகவும் நன்று' எனப் பலர் நினைக்கலாம். அருணகிரிநாதர், 'இருந்தபடி இருங்கள் என்று மாத்திரம் சொல்லி இருந்தால் எல்லா மக்களும் அந்த இன்பத்தை அடைய முடியும். ஆனால் அதற்கு முன்னாலே சில சாதனங்களைச் சொல்கிறார். தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம்என்றும் இடுங்கோள். அறம் செய்ய விரும்புதல் குழந்தைகளுக்கு உபதேசம் செய்கிறாள் ஒளவைப் பாட்டி. அகர வரிசையில் அவள் சொல்ல ஆரம்பித்து முதலில், 'அறஞ் செய விரும்பு” என்கிறாள். அதற்கு அடுத்தபடி "ஆறுவது சினம்" என்று போதிக்கிறாள். இவை இரண்டும் மனித வாழ்க்கைக்குப் பயன்படுகிற காரியங்கள். சாஸ்திரங்கள் எல்லாம் மனிதனுக்கு எந்தத் தர்மத்தைச் சொல்கின்றனவோ அதைக் குழந்தைகளுக்குச் சொல்கிறாள் ஒளவை. காரணம் என்ன? 'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆதலால் குழந்தை உள்ளத்திலேயே அந்த வித்தைப் புதைத்துவிட்டால் பிறகு அது நன்கு வளர்ந்து படரும். தலை நரைத்த பிறகு, "ஆண்டவன் நாமத்தைச் சொல்; அறத்தைச் செய்' என்று சொன்னால் வராது. ஆகவே வேத சாஸ்திரங்களின் பரம தாத்பர்யம் எதுவோ அதைச் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அகர வரிசைப் பாட்டிலே ஒளவை சொல்கிறாள். வாழ்க்கையில் மனிதர்கள் பெற வேண்டியவை அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் ஆகும். இவற்றையே தர்மார்த்த காம மோட்சம் என்கிறார்கள். இந்த நான்கையும் குழந்தைக்குப் பாட்டி சொல்கிறாள். 'அறஞ்செய விரும்பு' 5士