பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் விடுங்கோள் வெகுளியை. எத்தனையோ சொல்வதற்கு இருக்க, அருணகிரியார் கோபத்தை விடுங்கள் என்று சொன்னாரே என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றிக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மனத்திற்கு உண்டு. இப்படிப் பற்றிக் கொள்ள நினைப்பதைத் தான் காமம் என்பர். “காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்" என்று திருவள்ளுவர் பேசுகின்றார். மனிதர்களுக்குத் துன்பம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அவா. மற்றொன்று வெகுளி. அடுத்ததாக இருப்பது, ஒன்றை ஒன்றாக நினைக்கின்ற மயக்கம். முதலில் இருக்கின்ற அசுரன் அவா என்கிற காமம். மனம் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுவதுதான் ஆசை அல்லது அவா. மனத்தை நிறுத்த வேண்டுமானால் காமத்தை நிறுத்த வேண்டும். மனத்தின் சஞ்சாரம் அவாவின் வெளியீடு. அவா என்பதுதான் எல்லாப் பிறப்புக்கும் மூலவித்து. நமக்கு உபதேசம் செய்ய வருகின்ற அருணகிரியார் பிறப்புக்கு மூலமாக இருக் கின்ற பொருளைக் கெடு என்று மறைமுகமாகப் பாடுகிறார். அவர் காமம் இல்லாமல் இரு என்று சொன்னால் பயமாக இருக்கும். நமக்கு விளங்காது. காமத்தை அடக்கு என்று சொல் வதும், மனத்தைத் தடு என்று சொல்வதும் ஒன்றுதான். அடுத்தபடி, ஆசையினால் கோபம் உண்டாகிறது. காமம், வெகுளி இரண்டும் ஒழிய வேண்டும். முதலில் அதை அப்படியே சொல்லாமல், 'தடுங்கோள் மனத்தை' என்றும், 'விடுங்கோள் வெகுளியை' என்றும் சொன்னார். "ஆறுவது சினம்' என்று ஒளவையும் சொன்னாள். பற்று நீங்க வழி கோபத்தை அடக்கிவிட்டோம். எல்லாத் துன்பத்திற்கும் காரணமாய் இருக்கிற பற்றை எப்படி ஒழிப்பது? அதைப் போக்கு வதற்கு வழி உண்டு. அது தானம். பத்து ரூபாய் நம் கணக்கில் கூடிவிட்டது என்றால் அந்தப் பத்து ரூபாயைச் செலவிட்டு 57