பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 விட்டால் முன்பு இருந்த நிலை வந்துவிடுகிறது. அதே போலப் பல பல பொருள்களிடத்தில் பற்றுக் கொண்டுள்ள மனத்திடம் பற்றை விட்டுவிடு என்று சொன்னால் பயன் இல்லை. தேடின பொருள்களிடத்தில் பற்று இருப்பது போல, அந்தப் பொருள் களைப் பிறருக்குக் கொடுப்பதிலும் விருப்பம் வைக்க வேண்டும். பல பல பொருள்களை ஈட்டிப் பற்று வளர்கிறது; அவற்றை உவகையோடு பிறருக்குக் கொடுப்பதன் மூலம் அந்தப் பற்றுக் குறைந்துவிடுகிறது. ஒரு குழந்தை காகிதத்தை நிறையக் கிழிக் கிறது. அதைக் கிழிக்காதே என்று சொல்வதில் பயன் இல்லை. அப்போதைக்குப் பயந்து கொண்டு நம் முன் சும்மா இருந்தாலும் நாம் இல்லாதபோது அது எல்லாப் புத்தகங்களையும் கிழித்து விடும். ஆகவே நாம் என்ன சொல்ல வேண்டும்? 'கிழித்துப் போட்டவைகளைப் பொறுக்கிக் கொண்டுபோய்க் குப்பைத் தொட்டியில் போடு' என்று சொல்ல வேண்டும். குழந்தைக்குக் கிழிப்பது முதல் விளையாட்டு; கிழித்ததை வெளியில் கொண்டு போய்ப் போடுவது இரண்டாவது விளையாட்டாக அமைகிறது. அதனால் அறை முன்பு இருந்தது போலவே சுத்தமாக இருக்கும். பலபல பொருள்களை ஈட்டுவதன் மூலம் மனம் அழுக்கடை கிறது. ஈட்டிய பொருளைப் பிறருக்குத் தானம் செய்வதன் மூலம் அது மறுபடியும் சுத்தம் அடைந்துவிடுகிறது. பல காலமாகப் பொருளை ஈட்டி ஈட்டிப் பழக்கப்பட்ட மனத்தை மாற்ற வேண்டு மானால், அதற்கு மாற்று மருந்தாக இருப்பது அறநினைவு: தியாகம் செய்யும் உணர்ச்சி பிறருக்குக் கொடுக்கும் செயல். ஆகவே அருணகிரியார், தானம் என்றும் இடுங்கோள் என்று உபதேசிக்கிறார். தான வகை “எவற்றைத் தானம் பண்ண வேண்டும்?" என்று கேட்கலாம். தானம் என்பது அணா பைசாவைக் கொடுப்பது மாத்திரம் அன்று. நல்லது நினைப்பதே தானம். நல்ல வாக்குச் சொல்வதே தானம். இந்தக் காலத்தில் எத்தனை பேர் வாக்குத் தானம் செய்கிறார்கள் 'பாவம் இந்தப் பிள்ளை ஏழை; உங்கள் பள்ளியில் சேர்த்துக் 58