பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் கொள்ளுங்கள்' என்று ஒருவர் சிபாரிசு செய்கிறார். அதனால் அந்தக் குழந்தை பள்ளியில் சேர்ந்து, படித்து ஐ.ஏ.எஸ். பரீட்சை யில் தேர்ச்சி பெறுவதற்குரிய அடிப்படையான உபகாரத்தைச் செய்யவில்லையா அவர்? உண்மையான தூய நினைப்பினால் பலர் பிறருக்குத் தானம் செய்கிறார்கள். தாய் போடுகின்ற சாப்பாடு இந்த உயர்ந்த நிலையைச் சேர்ந்தது. குழந்தை வளர வேண்டுமென்று அவள் நினைக்கிறாள். அந்த நினைப்போடு வெறும் மோர்ஞ்சாதத்தைத் தான் பிசைந்து குழந்தைக்குப் போடு கிறாள். இருந்தாலும் அவளது தூய அன்பு நினைப்பினாலே அந்தக் குழந்தை வளருகிறது. சமுத்திர அலைகளைக் காட்டிலும், நாம் பார்க்கிற காற்று அலைகளைக் காட்டிலும், நாம் கேட்கிற ஒலி அலைகளைக் காட்டிலும், எண்ண அலைகள் மிகுதியான சக்தியை உடையவை. நாம் வாழ வேண்டுமென்று பெரியவர்கள் நினைக்கின்ற நல்ல நினைப்பானது, கண்ணுக்குத் தெரியாத மிக நுட்பமான சக்தி உடையது. அந்தச் சக்தியின் வன்மையினால் நம்மிடத்திலுள்ள கெடுதல் மறைந்துவிடும். கல்லை எடுத்து ஒருவனை அடிக்கிறோம்; மண்டை உடைந்து ரத்தம் வருகிறது. இரண்டு நாளில் காயம் ஆறிப்போகிறது. ஆனால் ஒருவனை வாயினால் அவன் மனம் புண்படும்படி பேசிவிடுங்கள். அந்தச் சொல் வெளிப்படையாக உடம்பில் காயத்தை ஏற்படுத்தாவிட்டா லும், அவன் உள்ளத்தை எவ்வளவு நோக அடித்துவிடுகிறது? "தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்று வள்ளுவர் சொல்லவில்லையா? வெறும் சொல், வெறும் காற்று; அது படும்போது அறிவுடையவனுக்கு, உணர்ச்சி உடைய வனுக்கு, உயிர் துடிக்கிறது. இது குழந்தைக்கு விளங்காது. செயலைக் காட்டிலும் சொல் நுட்பமானது; அதைக் காட்டி லும் எண்ணம் நுட்பமானது. அவற்றின் விளைவுகளும் அப்படியே வரவர நுட்பமானவே. நெஞ்சின் நினைப்பு அலைகள் வேல செய்வதைக் கண்டுபிடிக்க மேல்நாட்டு விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்கு உருவம் உண்டு, நிறம் உண்டு என்று கண்டுபிடித்துப் புத்தகம் எழுதி இருக்கிறார்கள். நினைப்பு எத்தனைக்கு எத்தனை தீயதாக இருக்கிறதோ அத்தனைக்கு அத்தனை அது சார்ந்த இடங்கள் துன்பமயமாக இருக்கும். 59