பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் இப்படிச் செய்தால் ஒரு நடு நிலைமை வரும். நீ அதே நிலையில் இருந்து கொண்டிரு' என்பது அருணகிரியார் உபதேசம். தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியை, தானம் என்றும் இடுங்கோள்; இருந்த படிஇருங்கோள். இருந்தபடி இருத்தல் இருந்தபடியே இருந்து கொண்டு உயிர்களுக்கு ஞானத்தைப் போதிக்கிறார் தட்சிணாமூர்த்தி. ஆலயத்திற்கு வருகின்றவர்களுக்கும் மனோவேகம் கெட்டுக் கொஞ்சம் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்யட்டும் என்பதற்கு வழிகாட்டியாக அவர் தெற்குமுகம் நோக்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பெரியவர்கள் பரமேசுவரன் சந்நிதானத்தில் வணங்கிவிட்டு, அம்பிகையையும் தரிசனம் செய்து கொண்டு, தட்சிணாமூர்த்தியின் சந்நிதானத்தில் உட்கார்ந்து கொண்டு மந்திரஜபம் செய்வார்கள். இறைவன் பிறரை உட்கார வைக்கத் தானும் உட்கார்ந்திருக்கிறான். இப்படி மற்ற மற்றச் செயல்கள் செய்யாமல், மனம் அடங்கி, செயல் அடங்கி மெளனமாக இருந்தபடி இருப்பார் களானால் அருள் அங்கே வரும். மனத்தில் பல காலமாக ஏறியிருக்கிற அழுக்கைத் துடைக்க வேண்டும். காமம் அற்றுப் போக மனத்தைத் தடுக்க வேண்டும். வெகுளியை ஒட்ட வேண்டும். பல காலமாக இருந்த பற்றுக் கழி வதற்காகத் தானம் செய்ய வேண்டும். இந்த மூன்று முயற்சியும் தீவிரமாக இருந்தால் மனத்தினுடைய மாசு போகும்; அது சுத்தமாகும். ஆண்டவன், "எந்த இடம் சுத்தமாக இருக்கிறது? நாம் தலையிலுள்ள அருள் மூட்டையை எங்கே சிறிது வைத்து விட்டு உட்காரலாம்?' என்று காத்துக் கொண்டிருக்கிறான். சுத்தமான உள்ளத்தை வைத்துக் கொண்டு, இருந்தபடி இருந்தான் அவன் அருள் அங்கே வெளிப்படும். தடை நீக்கம் ஒரு விளக்கை ஏற்றி வைத்து அதன்மேல் மரக்காலைக் கவிழ்த்தால் விளக்கின் ஒளியைப் பார்க்க முடியாது. மரக்கால் Si