பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 விளக்கின் ஒளியை மறைத்து, விளக்கை நமக்குக் காட்டாமல் தன்னைக் காட்டுகிறது. ஆனால் விளக்கின் மேல் கண்ணாடி குளோப்பைக் கவிழ்த்தால் அதற்குள் இருக்கிற விளக்கும் தெரிகிறது; விளக்கின் ஒளியும் வெளிப்படுகிறது. மரக்காலுக் குள்ளும் கண்ணாடிக் குளோப்புக்குள்ளும் இருப்பது விளக்குத் தான். ஆனால் மரக்கால் தன்னுள் உள்ள விளக்கின் ஒளி வெளிப் படுவதற்குத் தடையாக இருக்கிறது. கண்ணாடிக் குளோப் தடையாக இராமல் வெளியிடுகிறது. இதைப்போல் அகங்கார, மமகாரம் உடையவர்களுக்குள் ஆண்டவன் இருந்தாலும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. அவன் அருள் ஒளி வெளிப் படுவதற்கு அவைகளே தடையாக இருக்கின்றன. அகங்காரம், மமகாரம் நீங்கியவர்கள் பரிசுத்தமான கண்ணாடி போல் தம்முள் இருக்கும் ஆண்டவன் அருள் ஒளி வெளிப்படுவதற்குத் தடை ஏதும் இராமல் இருக்கிறார்கள். எல்லோர் உள்ளத்திலும் ஆண்டவன் இல்லாமல் இல்லை. புதிதாக அவன் வெளிப்படுவதில்லை. மறைந்திருந்தவன் வெளிப் படுகிறான். 'பரிசுத்தமான உள்ளம் உடையவர்களாக இருங்கள். அருள் வந்து தானே வெளிப்படும்' என்கிறார். இல்லாத ஒன்று எப்படி வெளிப்பட முடியும்? அது இருக்கிறது. ஆனால் வெளிப் பட முடியாமல் அகங்கார மமகார அழுக்குகள் அதற்குத் தடை யாக இருக்கின்றன. 'அந்த அழுக்கைக் கழுவி விடுங்கள். அருள் தானே வெளிப்படும்' என்கிறார் அருணகிரியார். ஆற்று நீர் ஆற்று நீர் பாய்ந்து கொண்டே இருக்கிறது. அதன் கரையில் மேடான வயல் ஒன்று இருக்கிறது. அதில் தண்ணிர் பாய்கிற தில்லை. மேடாக இருக்கிறதனால் பாய்கிறதில்லை. தண்ணீர் பாய வேண்டும் என்று வயலுக்குச் சொந்தக்காரன் நினைக்கிறான். ஒரு பெரியவர் அதற்கு வழி சொல்கிறார். ஆற்றோரத்தில் மேடாக இருக்கிறதே; அந்த மேட்டை வெட்டி விடு; நடுவில் இருக்கிற புதர்களை எடுத்துப் பள்ளமாக்கு. பிறகு பார், தானே ஆற்று நீர் உன் வயலில் பாயும்' என்கிறார். அவர் சொல்வது நியாயந்தானே? ஆற்று நீரைக் குடம் குடமாக எடுத்துவிட்டாலும் வயல் முழுமையும் பாய்ச்ச முடியாது. வயலில் நீர் பாயத் 62