பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை பெரியவருடைய அச்சம் ஒரு பெரியவர்: அவருக்கு வைரம், முத்து முதலியவை அடங்கிய ஒரு சிறு முடிச்சுக் கிடைத்தது. அற்கு முன்னால் அவர் என்ன என்ன மூட்டைகளையோ வைத்திருந்தார். அந்தக் காலங் களில் அவர் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் இன்றைக்கு வைரம், முத்து அடங்கிய இந்த முடிச்சுக் கிடைத்த வுடன் பயம் வந்துவிட்டது. அதை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் அஞ்சினார். தம்முடன் இருந்த ஒரு பையனிடம் அந்த மூட்டையைக் கொடுத்து, "அப்பா, இந்த மூட்டையை மிகவும் பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு என்னுடன் வா. நாம் இங்கே இருக்கக் கூடாது. வேறு ஒர் இடத்திற்கு ஓடிப் போய் விடுவோம்' என்றார். - நடுவழியில் அந்தப் பையன் மெல்ல முடிச்சைத் திறந்து பார்த்தான். அதைப் பக்கத்தில் இருந்த வேறு சிலரும் பார்த்தார்கள். அவனிடத்தில் உள்ள அந்த முடிச்சை எப்படித் திருட்டுத்தன மாகக் கைப்பற்றிக் கொண்டுபோவது எனச் சிலர் நினைத்தார்கள். 'அப்பா, இந்தப் பகல் நேரத்தில் எங்கே பார்த்தாலும் மக்கள் திரண்டு இருக்கிறார்கள். இவர்களுக்குத் தெரியாமல் நாம் எப்படிப் போவது? இவர்கள் எல்லோரும் நம்மிடம் உள்ள முடிச்சைப் பற்றிக் கொண்டு போகப் பார்க்கிறார்களே என்று பெரியவர் மிகவும் அஞ்சினார். இரவு வந்தது. இந்த ராத்திரியில் எங்கேயாவது ஒடிப் போய்விடுவோம்' என்று முதலில் அவர் நினைத்தார். ஆனால் அவரை வேறு ஒரு பயம் பற்றிக் கொண்டுவிட்டது. 'பகல் நேரத் திலாவது யாராவது கை முடிச்சைப் பற்றினால் பற்றுகின்றவனது முகம் தெரியும். இரவுக் காலத்திலோ கள்ளர் பயம் அதிகமாக இருக்கும். யாரேனும் கையில் உள்ளதைத் தட்டிப் பறித்துக்