பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலன் துணை கொண்டு போனால் பறித்துக் கொண்டவனது முகத்தைக்கூடப் பார்க்க முடியாது. கூவி அழைத்தால் யாரும் உதவி செய்ய வரமாட்டார்களே' என்று நடுங்கினார். ஆகவே, அவர் பையனைப் பார்த்துச் சொல்லுகிறார்: "நாம் கையிலுள்ள முடிச்சைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டு மென்றால் பகல், இரவு அற்ற ஓர் இடத்திற்குப் போனால்தான் அது சாத்தியமாகும். என்னுடன் ஒடிவா. நாம் இருவரும் பகல், இரவு அற்ற ஒரு வெளியில் போய் ஒளிந்து கொள்வோம்' என்கிறார். பையன், “சரி” என்கிறான். அந்தப் பையனுக்கு அவ்வளவாகச் சாமர்த்தியம் போதாது என்பது பெரியவரின் எண்ணம். முன்பு அவன் தலையில் கரி மூட்டையை ஏற்றிவைத்து அழைத்துப் போயிருக்கிறார்; விறகு மூட்டையைத் தூக்கிவரச் செய்திருக்கிறார். இன்றைக்கோ அவனிடம் வைர மூட்டையை அல்லவா கொடுத்திருக்கிறார்? அவன் அதைப் பத்திரமாக எடுத்து வருவான் என்ற நம்பிக்கை இல்லை. யார் துணை? அவர்களிடமுள்ள மூட்டையை வழியில் யாரும் பறித்துக் கொண்டு போகாமல் இருக்க வேண்டுமானால், பாதுகாப்போடு போவதுதான் நலம். பாதுகாப்பான இடம், இரவும் பகலும் இல்லாத இடம் என்று தெரிந்து கொண்டார். அந்த இடத்துக்குப் போய்ச் சேரும் வரையிலும் பாதுகாப்பு வேண்டுமே! அதற்கு யாரைப் பாதுகாப்பாளனான நியமிப்பது? அவன் திருடர்களை அடித்து ஒழிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அவர்களை எதிர்ப்பதற்குக் கையில் தக்க ஆயுதம் தாங்கியவனாகவும் இருக்க வேண்டும். வேலாயுதன் காப்பு அவருடைய நல்ல காலம், கூர்மையான வேலைத் தாங்கிய வேலாயுதன் பாதுகாப்பாளனாக வர இசைந்தான். அவ்வளவு தான். அந்தப் பெரியவர் மிக்க மகிழ்ச்சியோடு அந்தப் பையனைப் பார்த்து, "சீக்கிரம் ஓடி வா. பகல், இரவு அற்ற ஒரு வெளிக்குப் போய்விடுவோம். இங்கே இருக்கக் கூடாது. யார் எந்தச் சமயத்தில் 67